Russia Ukraine crisis: இவ்வளவு கோடி இழப்பா! உக்ரைன் போர்: ரஷ்ய அதிபர் புதின் முடிவால் கதறும் கோடீஸ்வரர்கள்

By Pothy RajFirst Published Mar 1, 2022, 12:02 PM IST
Highlights

உக்ரைனுடன் ரஷ்யா செய்துவரும் போரால், அந்நாட்டின் கோடீஸ்வர்கள் நாள்தோறும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை இழந்து வருகிறார்கள்.இதுவரை ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு ரூ.6.25 லட்சம் கோடி(8300 கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது என ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுடன் ரஷ்யா செய்துவரும் போரால், அந்நாட்டின் கோடீஸ்வர்கள் நாள்தோறும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை இழந்து வருகிறார்கள்.இதுவரை ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு ரூ.6.25 லட்சம் கோடி(8300 கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது என ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது.

முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், வடமெரிக்க நாடுகள் அடங்கிய நேட்டோ படையில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, முதலில் எல்லையில் படைகளை நிறுத்தியது. பின்னர், கடந்த மாதம் 24ம் தேதி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி போரில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக போர் நீடித்துவருகிறது. இதுவரை பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பு நாடுகளும் சென்றபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் உக்ரைனுடன் ரஷ்யா போர் செய்துவருதையடுத்து,ரஷ்யா மீது ஐரோப்பியயூனியன் நாடுகள்,அமெரி்க்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.

இதில் முக்கியமானது ஸ்விப்ஃட் எனப்படும் சர்வதேச வங்கிகளுக்கான பரிமாற்றத் தளத்தை ரஷ்ய வங்கிகள் பயன்படுத்தத் தடைவிதிப்பதாகும். இது தவிர ரஷ்யாவுக்கு முதலீட்டை நிறுத்தியது, கடனுதவியை நிறுத்தியது, முதலீட்டைநிறுத்தியது என பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
இது தவிர ரஷ்ய கோடீஸ்வரர்கள் அமெரிக்க, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செய்திருந்த முதலீடுகள், வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்களின் நிறுவனப்பங்குகளும் பட்டியிலப்படாமல் உள்ளன. 

உலகளவில் 500 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரஷ்யாவைச் சேர்ந்த ஏராளமான கோடீஸ்வர்கள் இருந்தனர். ஆனால், உக்ரைனுடன் போர் எனும் முடிவை புதின் எடுத்ததால், ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு இதுவரை 8300 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ரஷ்ய நிறுவனமான நோவாடெக், உலோக நிறுவனமான செவர்ஸ்டல் ஆகியவற்றின் பங்கு மதிப்பு 50%வரை நேற்றுச் சரிந்தது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடையால் ரஷ்ய நிறுவனப் பங்குகள் விலை கடுமையாக அடிவாங்கின

அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், அமெரி்க்கா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு வானில் ரஷ்ய விமானங்கள் பறக்கத் தடைவிதித்துள்ளன. இதனால், கல்ப்ஸ்ட்ரீம், பம்பார்டையர் ஆகிய நிறுவனங்கள் சிக்கலில் உள்ளன.வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய சொத்துக்கள் விவரங்களையும், அடையாளங்களையும் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும், பினாமி பெயரில் வைக்கக் கூடாது என்று பிரிட்டன் சட்டம் கொண்டுவர இருக்கிறது.

 இதுரஷ்ய முதலீட்டாளர்களை குறிவைத்து விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதும்  பெரும் சிக்கலில் ஆழ்த்தும். ஏனென்றால், ரஷ்ய கோடீஸ்வரர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை லண்டனில் போலி நிறுவனங்கள் பெயரில் வாங்கி குவித்துள்ளனர்

ரஷ்ய உலோக நிறுவன அதிபர் அலிஷர் உஸ்மானோவ், அல்பா குழு அதிபர் மிகைல் பிரிட்மேன், பெட் ஏவன், உருக்கு நிறுவன அதிபர் அலெக்சி மோர்டாஷோவ் ஆகியோர் தொழில்செய்ய ஐரோப்பிய யூனியன் நாடுகள் தடைவிதித்துள்ளன. 

புதிதின் நீண்டகால செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், மூத்த அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என பலருக்கு ஸ்விட்சர்லாந்து அரசு தடைவிதித்துள்ளது. ரஷ்ய விமானம் தங்கள் வான்எல்லைக்குள் வரவும் தடைவிதித்துள்ளது.

உலகநாடுகளின் பொருளாதாரத் தடையால் ரஷ்யாவுக்கு ஏற்கெனவே 1.50லட்சம் கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மேலும் அதிகரி்க்கும் எனத் தெரிகிறது. கோடீஸ்வரர் வாகித் அலெக்பெர்கோவ் நிகர சொத்து மதிப்பு 1300 கோடி டாலராகக் குறைந்துள்ளது. இதுதவிர 22 ரஷ்ய கோடீஸ்வரக்ளின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு 83 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது


 

click me!