russia ukraine war: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி தீர்ந்துவிட்டது, ரஷ்யபட்ஜெட்டில் இனிமேல் பணமில்லை என்று உக்ரைன் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி தீர்ந்துவிட்டது, ரஷ்யபட்ஜெட்டில் இனிமேல் பணமில்லை என்று உக்ரைன் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
போர்
உக்ரைன் நாட்டின் டோனட்ஸ், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களை சுயாட்சிபெற்றதாக அறிவித்து அதை ரஷ்யா அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடர்ந்தது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா வெறியாட்டம் ஆடி வருகிறது.
அகதிகளாக தஞ்சம்
இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அகதிகளாக போலந்து, ஹங்கேரி, மால்டோவா, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, ஜப்பான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன
தடை
ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதித்தது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையையடுத்து, ரஷ்ய வங்கிகள் சர்வதேச வங்கிகளுடன் பரிவர்த்தனை செய்ய உதவும் ஸ்விட் வங்கி முறைக்கு தடை விதிக்கப்பட்டது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூகஊடக நிறுவனங்கள் செயல்பாட்டை ரஷ்யாவில் நிறுத்தின.
உக்ரைன் பதிலடி
உக்ரைனின் தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்ற ரஷ்யபடைகள் கடுமையாகப் போராடியும் உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. மரியுபோல் நகரையும் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்த போதிலும் அவர்களின் பிடியிலிருந்து உக்ரைன் ராணுவம் நகரை மீட்டது. இதனால் ரஷ்ய ராணுவம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறது.
உக்ரைன் மீதான போரை நிறுத்தக் கோரி சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டும் இன்னும் போரை நிறுத்தவில்லை. மரியுபோல் நகரில் ஒரு திரையரங்கம் மீது ரஷ்ய ராணுவம் நடத்தியஏவுகணைத் தாக்குதலி்ல 300 பேர் உயிரிழந்தது உலகளவில்பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதியில்லை
இந்த சூழலில் ரஷ்ய ராணுவத்துக்கு போரிடஒதுக்குவதற்கு ரஷ்ய பட்ஜெட்டில் நிதியில்லை என்று உக்ரைன் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் புலனாய்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்தியில் “ ராணுவத்துக்கு தேவையான நிதியை தொடர்ந்து வழங்குவேன் என ரஷ்யா உறுதியளித்த நிலையில் இப்போது ராணுவத்துக்கு நிதிஅளிப்பதில் சிக்கல் நிலவுகிறது.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் தீர்ந்துவிட்டது.இனிமேல் ராணுவத்துக்கு வழங்க ரஷ்யாவிடம் பணம் இல்லை. உலகளவில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் ரஷ்ய நிதிநிலை அதிருப்தியாக இருக்கிறது. நிதி திரட்ட எந்தவிதமான வழியுமில்லை.
பட்ஜெட் நிதி தீர்ந்தது
கிரிமியாவில் நடப்புநிதியாண்டில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தும் பிப்ரவரி மாதமே ராணுவத்துக்கு முழுமையாக செலவிடப்பட்டது. மார்ச் மாதம் ராணுவத்துக்குச் செலவிடவும் பணமில்லை. இதனால் ரஷ்யா தனியார் ராணுவத்தை போருக்கு அழைத்துள்ளது ஆனால், இவர்கள் உக்ரைன் எல்லைக்குள் நுழைய மறுக்கிறார்கள். முடிவடைந்த ஒப்பந்தளுக்கே இன்னும் நிதிவழங்கப்படவில்லை என்பதால் உக்ரைன் எல்லைக்குள் செல்ல மறுக்கிறார்கள். காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கோரி போரில் ஈடுபடவும் மறுக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
இதனால், ரஷ்யா போரை அடுத்து எவ்வாறு நகர்த்தப்போகிறது, அல்லது போரை முடிவுக்கு கொண்டுவரப்போகிறதா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது