russia ukraine war: உக்ரைனுடன் ரஷ்யா போர் தொடுத்தபின், அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் ஏறக்குறைய 400 நிறுவனங்கள் ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பை நிறுத்திவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனுடன் ரஷ்யா போர் தொடுத்தபின், அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் ஏறக்குறைய 400 நிறுவனங்கள் ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பை நிறுத்திவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்
உக்ரைன் நாட்டின் டோனட்ஸ், லுஹான்ஸ் ஆகிய இரு மாநிலங்களை சுயாட்சிபெற்றதாக அறிவித்து அதை ரஷ்யா அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடர்ந்தது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா வெறியாட்டம் ஆடி வருகிறது.
அகதிகள்
இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அகதிகளாக போலந்து, ஹங்கேரி, மால்டோவா, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், கனடா, ஜப்பான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
பொருளாதாரத் தடை
ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதித்தது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையையடுத்து, ரஷ்ய வங்கிகள் சர்வதேச வங்கிகளுடன் பரிவர்த்தனை செய்ய உதவும் ஸ்விட் வங்கி முறைக்கு தடை விதிக்கப்பட்டது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூகஊடக நிறுவனங்கள் செயல்பாட்டை ரஷ்யாவில் நிறுத்தின.
உணவு விற்பனை நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், கார்தயாரிப்புநிறுவனங்கள் என ஏராளமான நிறுவனங்கள் ரஷ்யாவில் செயல்பாட்டை நிறுத்தின, முதலீட்டை நிறுத்திவைத்தன.
400 நிறுவனங்கள்
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரஷ்யாவில் 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதுகுறித்து அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்திவரும் இந்தியாவைச் சேர்ந்த பாபி பாலச்சந்தர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ அமெரிக்க பொருளாதாரத் தடைக்குப்பின் ரஷ்யாவில் செயல்பட்டு வந்த 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பாட்டை நிறுத்திவிட்டன. என்னுடைய சொந்த நிறுவனமான எக்ஸ்டெரோகூட ரஷ்யாவில் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. நாங்கள் அரசின் விதிகளைக் கடைபிடிக்க வேண்டியதுஅவசியம். ஆதலால், தற்போதுள்ள நிலையில் ரஷ்யாவுடன் எந்த வர்த்தகமும் கிடையாது.
வாழ்க்கை கடினம்
ரஷ்யாவுக்கு பல்வேறு நிறுவனங்கள் முக்கிய மென்பொருளை நிறுத்திவிட்டன. இதனால் வங்கி, நுகர்வோர் பொருட்கள் பிரிவு, விளையாட்டு உள்ளிட்டவைகளின் நிலை, செயல்பாடு ஆகியவை கடினமானதுதான். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், லிங்ட்இன் உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்காவைச் சேர்ந்தவை, அவை நிறுத்தப்படும்போது, ரஷ்யாவின் நிலை என்னவாகும்
உக்ரைனின் இருக்கும் நிலை மிகவும் பரிதாபமாக வேதனையாக இருக்கிறது. இந்த போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் இரக்கப்படுகிறோம்” எனத் தெரிவித்தார்
உதவி
ஐ.நா மனித உரிமைகள் கணக்கெடுப்படி இதுவரை 2,788 மக்கள் உயிரிழந்துள்ளனர், இதில் 1081 பேர் வீரர்கள் உயிரிழந்தனர்.1707 பேர் காயமடைந்துள்ளனர். 135 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய யூனியன் அமைப்பு 3400 கோடி யூரோக்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.