medicine price hike: ஆன்டிபயாட்டிக் உள்பட 800 வகை அத்தியாவசிய மருந்துகள் விலை 10 % வரை உயர்கிறது

Published : Mar 26, 2022, 12:03 PM ISTUpdated : Mar 26, 2022, 12:06 PM IST
medicine price hike: ஆன்டிபயாட்டிக் உள்பட 800 வகை அத்தியாவசிய மருந்துகள் விலை 10 % வரை உயர்கிறது

சுருக்கம்

medicine price hike : வலி நிவாரணி, ஆன்ட்டிபயாட்டிக், ஆன்ட்டி இன்பெக்டிவ் மாத்திரைகள், உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்திலிருந்து 10 முதல் 11 சதவீதம் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலி நிவாரணி, ஆன்ட்டிபயாட்டிக், ஆன்ட்டி இன்பெக்டிவ் மாத்திரைகள், உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்திலிருந்து 10 முதல் 11 சதவீதம் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிந்துரை

இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நேற்று வெளியிட்ட் அறிவிப்பின்படி, மருந்து நிறுவனங்கல் 2021 ஆண்டு மொத்தவிலை குறியீட்டின் அடிப்படையில் மருந்துகள்விலையை 10.70 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதித்துள்ளது. 

800 வகை மருந்துகள்

இதனால் தேசிய அத்தியாவசியப் பட்டியலி்ல் இருக்கும் 800 வகை மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள்விலை 10 முதல் 11 சதவீதம் வரை ஏப்ரல் மாதத்திலிருந்து விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார ஆலோசகர் அலுவலகம், மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகப்பிரிவு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை மொத்தவிலைக் குறியீட்டின் அடிப்படையில், அளித்த பரிந்துரை அடிப்படையில் 10.70 சதவீதம் வரை மருந்துகள் விலையை உயர்த்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைக் கட்டுப்பாடு

மத்திய அரசின் அத்தியாவசியப் பட்டியலில் இருக்கும் மருந்துகள் அனைத்தும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களுக்கு அரசு மருத்துமனைகளில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயித்து வருகிறது. 

விலை உயரும்

இந்த வகை மருந்துகள் சாதாரண காய்ச்சல், ஒவ்வாமை, இதய நோய்கள், ரத்தஅழுத்தம், தோல்நோய்கள் உள்ளிட்டபல நோய்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை மருந்துகள் விலை உயரக்கூடாது, சமானிய மக்களுக்கு சலுகை விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக 886 வகை மருந்துகளுக்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலைக் கட்டுப்பட்டை நிர்ணயித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இருக்கும் 1,817வகையான புதிய மருந்துகளுக்கும் விலைக் கட்டுப்பாடும் விதித்துள்ளது. ஆனால், இவை ஏப்ரல் மாதத்திலிருந்து வெளிச்சந்தையில் சில்லரையில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்