anil ambani resigns:அனில் அம்பானிக்கு இந்த நிலைமையா! சொந்த நிறுவனத்திலிருந்தும் ராஜினாமா: என்ன காரணம்?

Published : Mar 26, 2022, 11:29 AM ISTUpdated : Mar 26, 2022, 11:36 AM IST
anil ambani resigns:அனில் அம்பானிக்கு இந்த நிலைமையா! சொந்த நிறுவனத்திலிருந்தும் ராஜினாமா: என்ன காரணம்?

சுருக்கம்

anil ambani resigns : ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். 

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். 

செபி உத்தரவு

பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவின்படி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனத்தின் பதவியிலும் அனில்அம்பானி இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி அனில் அம்பானி பதவி விலகியுள்ளார்.

காரணம் என்ன?

ரிலையன்ஸ் ஹோம் பைனாஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி, மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் 3 பேர் நிறுவனத்தின் நிதியை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதை செபி கண்டுபிடித்தது. இதையடுத்து, அனில்அம்பானி, மற்றும் ஊழியர்கள் 3 பேரும் செபியில் பட்டியலிடப்பட்ட ரிலையன்ஸின் எந்த நிறுவனத்திலும் நிர்வாக ரீதியான பதவியில் இருக்கக்கூடாது. மறு உத்தரவு வரும்வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி, சொந்த நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பதவியில்கூட தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ராஜினாமா

இதையடுத்து, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குச்சந்தையில் நேற்று அறிக்கைத் தாக்கல் செய்தது அதில் “ ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் டி அம்பானி, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டார். செபி உத்தரவுக்கு ஏற்ப அவர் எந்தவிதமான நிர்வாகப் பதவியிலும் இல்லை” எனத் தெரிவித்தது.

இதேபோன்று ரிலையன்ஸ் கட்டுமான நிறுவனம் பிஎஸ்இ அமைப்பில் தாக்கல் செய்த மனுவில் “ ரிலையன்ஸ் கட்டுமான நிறுவனத்தின் எந்தவிதமான நிர்வாகரீதியான பதவியிலும் அனில்அம்பானி இல்லை. அனைத்துப் பதவியிலிருந்தும் விலகிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளது

புதிய இயக்குநர்

ரிலையன்ஸ் கட்டுமானம், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு கூடுதல்இயக்குநராக ராகுல் சரின் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாகக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு கூடுதல் இயக்குநராக ராகுல் சரின் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் அனில் அம்பானியின் தலைமை மீது நிர்வாகக் குழு முழுமையான நம்பிக்கை வைத்துள்ளது. வரும் நிதியாண்டில் அனைத்து கடன்களையும், நிதிச்சவால்களையும் சமாளிக்கும். நிர்வாகக்குழுவின் நன்மைக்காக தொடர்ந்து வழிகாட்டல் நடவடிக்கையில் அனில் அம்பானி இருப்பார் என வாரியக்குழு நம்புகிறது எனத் தெரிவித்தது.

பங்கு விலை

கடந்த ஓர் ஆண்டாக ரிலையன்ஸ் பங்கின் விலை ரூ.32லிருந்து படிப்படியாக அதிகரித்து ரூ.150ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள 72வயதான ராகுல் சரின் 35 ஆண்டுகளாக மத்திய அரசின் செயலாளர் அந்தஸ்தில் இருந்தவர். தர்போது அப்தோனியா பிரைவேட் லிமிட் இயக்குநராக சரின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்