
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த 5 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.3.20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
நிறுத்திவைப்பு
5 மாநிலத் தேர்தல் காரணமாககடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றாமல் வைத்திருந்தன. தேர்தல் முடிந்தநிலையில், கடந்த 21ம் தேதி முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டன.
தொடர்ந்து இரு நாட்கள் உயர்த்தப்பட்டநிலையில் நேற்று முன்தினம் உயர்த்தப்படவில்லை. ஆனால், நேற்றும், இன்றும், தொடர்ந்து பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன
சென்னையில் விலை என்ன
இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.98.61ஆகவும், டீசல் ரூ.89.87ஆகவும் விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 84 காசுகள் அதிகரித்து ரூ.113.35ஆகவும், டீசல் 85 பைசா உயர்ந்து, ரூ.97.55 ஆகவும் விற்பனையாகிறது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104.43 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.94.47ஆகவும் விற்பனையாகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால் கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பேரல் 140 டாலரை எட்டிய நிலையில் கடந்த வாரத்தில் குறைந்தது. பின்னர் இந்தவாரம் மீண்டும் கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவைத்தபோது கச்சா எண்ணெய் விலை பேரல் 81 டாலராக இருந்தது, தற்போது பேரல் 117 டாலருக்கும் மேல் அதிகரித்துள்ளது.
ரூ.19ஆயிரம் கோடி இழப்பு
கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும் எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசிஎல், ஹெச்பிசிஎல் ஆகியவை உயர்த்தாததால் ரூ.19ஆயிரம் கோடி இழப்புஏற்பட்டுள்ளதாக மூடிஸ் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயரும்
கச்சா எண்ணெய் விலை சராசரியாக பேரல் 100 டாலர் வந்துவிட்டால், எண்ணெய் நிறுவனங்கள் இழப்பிலிருந்து தப்பிக்க பெட்ரோல், டீசலில் குறைந்தபட்சம் லிட்டரு்ககு ரூ.9 முதல் 12 ரூபாய்உயர்த்தினால் மட்டுமே முடியும். ஆனால், தற்போது 110 டாலரைக் கடந்துவிட்டதால், பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்த்துவது அவசியம் என கிரிசில் நிறுவனம் தெரிவித்துள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.