russia ukraine war உக்ரைனுக்கு எதிரானப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, மே 4ம் தேதிக்குள், இரு கடன் பத்திரங்களுக்கு டாலர்களில் பணம் செலுத்தாவிட்டால், திவாலானதாக கருதப்படும் என்று ரேட்டிங் நிறுவனமான மூடிஸ் எச்சரித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரானப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, மே 4ம் தேதிக்குள், இரு கடன் பத்திரங்களுக்கு டாலர்களில் பணம் செலுத்தாவிட்டால், திவாலானதாக கருதப்படும் என்று ரேட்டிங் நிறுவனமான மூடிஸ் எச்சரித்துள்ளது.
பொருளாதாரத் தடை
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போருக்கு ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்கா, பிரிட்டன் கடும் கண்டனம் தெரிவித்து, பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ரஷ்ய வங்கிகள் உலக நாடுகளின் வங்கிகளுடன் பரிமாற்றம் செய்ய இயலாத அளவாக ஸ்விப்ட் முறையும் ரத்து செய்யப்பட்டது.
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் தடைவிதி்த்துவிட்டன. இதனால் ரஷ்யா எந்தவிதமான பரிமாற்றத்துக்கும் டாலரைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
இதனால் ரஷ்யா தனது சொந்த கரன்ஸியான ரூபிளை மட்டுமே தனது நட்பு நாடுகளுடனான வர்த்கத்துக்கும், பரிமாற்றத்துக்கும் பயன்படுத்துவது குறித்து பேசி வருகிறது.
திவால் எச்சரிக்கை
இந்நிலையில் ரஷ்யா வெளிநாடுகளில் வாங்கிய கடன்பத்திரங்களுக்கான முதிர்வுத் தேதி மே 4ம் தேதியுடன் முடிவதால் அதற்குள் டாலரின் கடன்தொகையைச் செலுத்த வேண்டும். ரூபளில் செலுத்தும் பட்சத்தில் திவாலானதாகக் கருதப்படும் என ரேட்டிங் நிறுவனம் எச்சரித்துள்ளது
இதுகுறித்து ரேட்டிங் நிறுவனமான மூடிஸ்வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
டாலரின் கடன் தொகை
உக்ரைன் மீது தொடுத்த போரால் ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையால் ரஷ்யா டாலர்களைப் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. இந்த சூழலில் ரஷ்யா வாங்கிய கடன்பத்திரங்களுக்கு வரும் மே 4ம் தேதிக்குள் டாலரில் கடன்தொகையைச் செலுத்தவேண்டும். அவ்வாறு டாலரில் கடன்தொகையைச் செலுத்தாமல், ரூபிளில் கடனைச் செலுத்தினால் ரஷ்யா திவாலாகிவிட்டதாகக் கருதப்படும்.
கடன் பத்திரங்களைப் பொறுத்தவரை டாலரைத் தவிர வேறு எந்தநாட்டுக் கரன்ஸியும் செலுத்தக்கூடாது என்ற விதிமுறை இருக்கிறது.” எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, ஸ்டான்டர்ஸ் அன்ட் பூர்ஸ் ரேட்டிங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ அமெரிக்க டாலரின் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் ரஷ்யா திவாலாகிவிட்டதாக கருதப்படும்” என எச்சரித்துள்ளது
சட்ட நடவடிக்கை
அமெரிக்க வங்கிகளில் வாங்கிய கடனை டாலர்களில் திருப்பிச் செலுத்த ரஷ்யாவுக்கு கடந்தவாரம் அமெரிக்கா தடை விதித்தது. அதற்கு முன்பு, வெளிநாட்டுக்கடனை டாலர்களில் செலுத்த அமெரிக்க அனுமதித்திருந்தநிலையில் திடீரென இந்த முடிவை எடுத்தது.
ரஷ்யாவுக்கு தற்போதுவரை 65கோடி டாலர்களை வரும் ஏப்ரல்4ம்தேதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. எங்களை கடனைத் திருப்பிச் செலுத்தவிடாமல் முடக்கினால், நாங்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் என்று சமீபத்தில் ரஷ்ய நிதிஅமைச்சர் அன்டன் சல்லிவனோவ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ரஷ்யா திவாலானதாக அறிவிக்கப்ப்டால், கடந்த 1917ம் ஆண்டுக்குப்பின் ரஷ்யா வாங்கிய கடனுக்கு பணத்தைதிருப்பிச் செலுத்த முடியாத மோசமான நிலையையும், திவால் என்ற பெயரையும் சந்திக்கும். கடந்த 1917ம் ஆண்டு போல்ஸ்விக் புரட்சியின்போது இதேபோன்ற சூழல் ஏற்பட்டு திவாலானதாக அறிவிக்கப்பட்டது.