russia ukraine news: ரஷ்ய வங்கிகளில் தூங்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்களின் 13 கோடி டாலர் ஈவுத்தொகை

By Pothy Raj  |  First Published May 28, 2022, 2:01 PM IST

russia ukraine news :உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா மீது உலக நாடுகள் விதித்த தடையால், ரஷ்ய நிறுவனங்கள் தர வேண்டிய 12.55 கோடி டாலர் ஈவுத்தொகையை எடுக்கமுடியாமல் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சிக்கலில் சிக்கியுள்ளன.


உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா மீது உலக நாடுகள் விதித்த தடையால், ரஷ்ய நிறுவனங்கள் தர வேண்டிய 12.55 கோடி டாலர் ஈவுத்தொகையை எடுக்கமுடியாமல் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சிக்கலில் சிக்கியுள்ளன.

இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் ரஷ்யாவில் உள்ள வான்கோநெப்ட் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்திலும், கிழக்கு சைபிரியாவில் உள்ள டாஸ்-யுர்யாக்கிலும் முதலீடு செய்துள்ளன.

Tap to resize

Latest Videos

இதில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 29.90 சதவீத முதலீட்டையும்,இந்தியன் ஆயில் நிறுவனம் 23.90 சதவீத முதலீட்டையும் செய்துள்ளன. இதில்  டாஸ்-யுர்யாக் நிறுவனம் காலாண்டுக்கு ஒருமுறை ஈவுத் தொகையையும், வான்கார் பீல்ட் நிறுவனம் அரையாண்டுக்கு ஒருமுறையும் ஈவுத் தொகையை இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால், தற்போது ரஷ்யா மீது பொருளாதாரத் தடை மற்றும் சர்வதேச வங்கிப்பரிமாற்றமான ஸ்விட் முறையையும் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய 13 கோடிடாலர் மதிப்பிலான ஈவுத்தொகை ரஷ்யாவில் முடங்கியுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிதிப் பிரிவுத் தலைவர் ஹரிஷ் மாதவ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் எங்களுக்குத் தரவேண்டிய ஈவுத் தொகை ரஷ்ய வங்கிகளில் முடங்கியுள்ளது. ஸ்விட் முறையை ரஷ்யா பயன்படுத்த முடியாததால் இந்திய நிறுவனங்களுக்கு வரவேண்டிய 13 கோடிடாலர் தூங்குகிறது” எனத் தெரிவித்தார்

ரஷ்யாவின் பிரிட்டிஷ் பெட்ரோலியம், எக்ஸ்கான் மொபைல் கார்ப்பரேஷ்ன் ஆகிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ரஷ்யாவில் விட்டுச் செல்லும் சொத்துக்களை வாங்க இந்திய நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது

மேலும், இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் ஷெல் நிறுவனமும் ரஷ்யாவில் உள்ள தங்களின் இயற்கை எரிவாயு உற்பத்தி திட்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்வது குறித்தும் பேச்சு நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

click me!