us dollar to inr: ரூபாய் மதிப்புச் சரிவு மார்க்கதர்ஷக் மண்டல் வயதைக் கடந்துவிட்டது: காங்கிரஸ் கட்சி கிண்டல்

By Pothy RajFirst Published Jul 15, 2022, 11:38 AM IST
Highlights

இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு அமெரி்க்க டாலருக்கு எதிராக மார்க்கதர்ஷக் மண்டல் வயதைக் கடந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி மத்தியஅரசைக் கிண்டல் செய்துள்ளது.
 

இந்திய ரூபாய் மதிப்பு அமெரி்க்க டாலருக்கு எதிராக மார்க்கதர்ஷக் மண்டல் வயதைக் கடந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி மத்தியஅரசைக் கிண்டல் செய்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு கடந்த இரு பிப்ரவரி மாதத்திலிருந்து கடும் நெருக்கடிக்கு ஆளாகிவருகிறது. ரஷ்யா உக்ரைன் போருக்குப்பின், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம், டாலர் மதிப்பு வலுப்பெறுவது ஆகியவற்றால், ரூபாய் மதிப்பு மோசமாகச் சரிந்து வருகிறது.

adani: haifa port: adani port: இஸ்ரேல் ஹைபா துறைமுகம்: 120 கோடி டாலருக்கு வாங்கியது அதானி குழுமம்

இந்திய ரூபாய் மதிப்பு நேற்று வர்த்தகம் முடியும் போது ஏறக்குறைய 80 ரூபாயை நெருங்கி ரூ.79.99 என வந்துவிட்டது. ஆனால், 80 ரூபாயைத் தொடவில்லை. கடந்த இரு வாரங்களாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வேகமாக இருந்து வருகிறது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை பாஜகவின் மார்க்கதர்ஷக் மண்டல் குழுவினரின் வயதோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களை மார்க்கதர்ஷக் மண்டல் குழுவில் சேர்த்துவிடுவார்கள். இதைக் குறிப்பிட்டுத்தான் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் கிண்டல் செய்துள்ளனர்.

தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமியுங்கள்: நிர்மலாவை வம்பிழுத்த ப.சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்ரில் பதிவிட்ட கருத்தில் “ ரூபாய் மதிப்பு 40 ஆக இருக்கும் போது புத்துணர்ச்சி, 50ரூபாயாக மாறியபோது இந்தியாவுக்குச் சிக்கல், 70ரூபாயாக சரிந்தபோது, ஐசியூ, 80ரூபாயாக வீழ்ந்தபோது அம்ரித்கால்” எனத் தெரிவித்தார். அம்ரித்கால் என்பது சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப்பின் வரும் 25 ஆண்டுகளாகும்.

காங்கிஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் “ இந்திய ரூபாய் மதிப்பு தற்போது மார்க்கதர்ஷக் மண்டல் வயதினரைக் கடந்துவிட்டது.  இன்னும் வீழ்ச்சி அடைவதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும். மத்திய அரசின் நம்பகத்தன்மை இன்னும் எவ்வளவு குறையப் போகுதோ. சூப்பர் மோடிஜி” எனத் தெரிவித்துள்ளார். மேலும்#FallingRupeeDestroyingEconomy" எனும் ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

ரூ.1000 கோடிக்கு மருத்துவர்களுக்கு இலவசங்கள்: ஐடி ரெய்டில் டோலோ 650 தயாரிப்பு நிறுவன மோசடி அம்பலம்

ஜூன் மாதத்தின் சில்லறைப் பணவீக்கம், மொத்தவிலைப் பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. சில்லறை விலைப்பணவீக்கம் 7.1 சதவீதம் என்ற அளவில் குறைந்தாலும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6சதவீதத்துக்குள் வரவில்லை. மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 15 மாதங்களாக இரட்டை இலக்க்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய்விலை சரிந்து வருவது, ரூபாய் மதிப்பு மோசமாகச் சரிவதிலிருந்து காக்கிறது.
 

click me!