
தங்கத்தின் விலை கடும் ஊசலாட்டத்துடன் இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக குறைந்து தங்கம், நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 40ரூபாயும், சவரணுக்கு 320 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,676க்கும், சவரண் ரூ.37,408க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 விலை குறைந்து, ரூ4,636 ஆகவும், சவரணுக்கு ரூ.320 சரிந்து ரூ.37,088க்கும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4635ஆக விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை தொடர்ந்து 4-வது நாளாக சரிந்த நிலையில் நேற்று விலை உயர்ந்ந்தது. இன்று மீண்டும் சரிந்துள்ளது. தங்கத்தில் விலையில் கடும் ஊசலாட்டம் இருந்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2ஆயிரம் வரை குறைந்துள்ளது.
விலை மேலும் குறையுமா
அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவு 9.1 சதவீதமாக உயர்ந்துவிட்டது. அதிகரி்த்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி ஏற்கெனவே வட்டிவீதத்தை இருமுறை உயர்த்திவிட்ட நிலையில் இந்த மாத இறுதியில் மீண்டும் 100 புள்ளிகள் வரை வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை வட்டி உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு மேலும் வலுப்பெறும், பல்வேறு நாட்டு கரன்ஸிகளின் மதிப்பும் நெருக்கடிக்குள்ளாகும். இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைவிட டாலரில் முதலீடு செய்வது பாதுகாப்பானது, அதிகமான வட்டி கிடைக்கும் என நம்பி அதில் கவனத்தை திருப்புவார்கள்.
அது மட்டுமல்லாமல், டாலர் மதிப்பு அதிகமாகும்போது, டாலரில் வாங்கும் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க வேண்டிய நிலைக்கு பல நாடுகள் தள்ளப்படும். இதனால், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை, முதலீடு குறைந்து விலையும் வரும் நாட்களில் மேலும் குறையலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளதும் தங்கம் விலை குறைவுக்கு காரணியாகக் கொள்ளலாம்.
வெள்ளி விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.90 காசு குறைந்து, ரூ.60.40க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.1900 குறைந்து, ரூ.60,400க்கு விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.