கஜானாவை காலியாக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வு: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

By Pothy RajFirst Published Feb 25, 2022, 1:57 PM IST
Highlights

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரவது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு பெரிய தலைவலியாக அடுத்த நிதியாண்டில் மாறப்போகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரவது மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு பெரிய தலைவலியாக அடுத்த நிதியாண்டில் மாறப்போகிறது. 

பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தவிர்க்க உற்பத்தி வரியைக் குறைத்தால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினால் பணவீக்கம் உயரும், மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் அடுத்த நிதியாண்டில் பெரும் சிக்கலான சூழலைச் சந்திக்கலாம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் 21 % விலைஉயர்ந்திருக்கிறது. உக்ரைன் ரஷ்யா போருக்குப்பின் பிரன்ட் கச்சா எண்ணெய்பேரல் 105 டாலராக எகிறியுள்ளது. இதே நிலை நீடித்தால், விலை உயர்ந்தால், பெரும் சுமை மத்திய அரசுக்கு வந்து சேரும்.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் பொருளாதாரப்பிரிவின் தலைமை ஆய்வாளர், ஆலோகர் சவுமியா காந்தி கோஷ் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.  அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, 2022-23ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு பெரும் சுமையாக மாறும். ஏறக்குறைய ரூ.ஒரு லட்சம் கோடிக்கு அரசுக்கு பற்றாக்கையை உருவாக்கும் வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தபோதிலும் பெட்ரோல், டீசல் விலையை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து உயர்த்தப்படவில்லை. 5 மாநிலத் தேர்தல் காரணமாக எந்தவிதமான நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபடவில்லை.

ஆனால், பிரன்ட் கச்சா எண்ணெய் சந்தைவிலையில் பேரல் 105 டாலர் முதல் 110 டாலர் வரை எகிறிவிட்டது. இந்தக்கணக்கீட்டின்படி பார்த்தால், பெட்ரோல், டீசலை தேர்தலுக்குப்பின் லிட்டர் ஒன்றுக்கு ரூ.9 முதல் ரூ.14 வரை உயர்த்த வேண்டும்

ஆனால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் மக்களுக்கு சுமையை அதிகரிக்க வேண்டாம், உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தால், மத்தியஅரசுக்கு மாதம் ரூ.8ஆயிரம் கோடி இழப்பு உருவாகும். 

இந்த உற்பத்தி வரிக் குறைப்பு அடுத்த நிதியாண்டிலும் ஒருவேளை தொடர வேண்டிய சூழல்இருந்தால், பெட்ரோல், டீசல் நுகர்வு 8 முதல் 10% உயரும். ஆனால், அரசுக்கு வருவாய் இழப்பு என்பது அடுத்த நிதியாண்டில் ரூ.95ஆயிரம் கோடிமுதல் ரூ.ஒரு லட்சம் கோடிவரை இருக்கும். 
பட்ஜெட்டில் பல்வேறு செலவுக்கும் நிதிஒதுக்கிய நிலையில், இந்த இழப்பால் மத்திய அரசின் கஜானாவில் பெரிய ஓட்டை உருவாகும்.

அதுமட்டுமல்லாமல் 2022, ஜனவரியில் சில்லரை பணவீக்கம்6.1% உயர்ந்துவிட்டது. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அளவுக்கு அருகே இருக்கிறது. டிசம்பரில் சில்லரை பணவீக்கம் 5.59% , நவம்பரில் 4.91% மட்டும்தான் இருந்தது. ஆனால், உணவுப்பொருட்கள் விலை ஏற்றத்தால்தான் ஜனவரியில் 6.1% ஆகஉயர்ந்துள்ளது. இதில் உக்ரைன்-ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றப்போகிறது” 

இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!