ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 7.01 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 7.01 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட உயர்ந்துதான் இருக்கிறது. தொடர்ந்து 6-வதுமுறையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிட சில்லரைப் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் பணவீக்கக் கட்டுப்பாட்டு அளவு 6 சதவீதமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
itr filing date: வருமானவரி செலுத்துவோர் கவனத்துக்கு! படிவம்26ஏஎஸ் பற்றி தெரியுமா!
பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படாமல் இருப்பது, சமையல் எரிவாயு விலையில் பெரிதாக மாற்றம் இல்லாமல் இருப்பது, உணவுப் பொருட்கள் விலை கட்டுக்குள் வந்திருப்பதால் ஜூன் மாதத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது. கடந்த மேமாதத்தோடு ஒப்பிடுகையில் ஜூன் மாதம் குறைவுதான். மே மாதத்தில் பணவீக்கம் 7.95 சதவீதமாக இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் விலை வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது, சமையல் எண்ணெய்க்கு வரிச்சலுகை அளி்த்தது போன்ற நடவடிக்கையால் ஜூனில் பணவீக்கம் படிப்படியாக குறைந்துள்ளது.
தனிநபர் கடன் வாங்கப்போறீங்களா? 5 முக்கிய விஷயங்கள் தெரிந்திருத்தல் அவசியம்
ஆனால், ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் வைக்க இலக்கு வைத்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே கடந்த மே மாதத்திலும், ஜூனிலும் ரெப்போ ரேட் வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதுவரை 90 புள்ளிகள் வரை வட்டியில் உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
சீனாவில் வங்கிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்: பணம் வழங்க அரசு உறுதி
இன்னும் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்பதால், அடுத்து ஆகஸ்ட் மாதம் நடக்கும் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்துவரும் மாதங்களிலும் கடனுக்கான வட்டி உயரக்கூடும்.