தமிழக உற்பத்தி துறையில் சரிவு: ரிசர்வ் வங்கி அறிக்கை

 
Published : Jun 25, 2017, 12:32 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
தமிழக உற்பத்தி துறையில் சரிவு: ரிசர்வ் வங்கி அறிக்கை

சுருக்கம்

Reserve Bank statement The decline in the Tamil Nadu manufacturing sector

தமிழகத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி கணிசமாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் மாநிலத்தின் உற்பத்தித்துறை வளர்ச்சி பெறும் என்ற எதிரபார்ப்பு இருந்தது.  இந்த நிலையில், தமிழகத்துக்கு போதிய முதலீடுகளும், தொழில் துவங்குவதற்கான வரவேற்பும் கிடைக்கவில்லை. 

இதன் காரணமாக தமிழகத்துக்கு வந்த சில முதலீடுகளும் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன.

இந்த காரணங்களால் தமிழக உற்பத்தி துறை வளர்ச்சி முன்னர் இருந்ததைவிடக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் முன்னள் இருந்ததைவிட வளர்ச்சி குறைந்துள்ளதாக அதில் கூறியுள்ளது. 

வளர்ச்சி குறைவு காரணமாக இந்த நிதியாண்டின் தமிழக உற்பத்தித்துறையின் வளர்ச்சி 1.65 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சி நிலை கடந்த நிதியாண்டில் 7.11 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. இந்த வளர்ச்சி தற்போது மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதிமுகவில் பல்வேறு கோஷ்டிகள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக தமிழகத்தில் மக்கள் நலப் பணிகளும், அரசு நிர்வாகப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழல் காரணமே உற்பத்தி துறையின் சரிவுக்கு காரணம் என்று பொருளார நிபுணர்கள் கூறுகின்றனர்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
TATA: திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.! டாடாவின் புதிய காருக்கு குவிந்த வரவேற்பு.! ஒரே நாளில் லட்சக்கணக்கில் புக்கிங்.! விலை இதுதான் மக்களே.!