அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து 1000 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்நாட்டு் வங்கிகள் அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த விவரங்களை ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.
அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து 1000 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்நாட்டு் வங்கிகள் அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த விவரங்களை ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.
ரிசர்வ் வங்கி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இருப்பினும் இந்த தகவலை உறுதி செய்ததாக, ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: மக்களவை ஒத்திவைப்பு
அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லு, மோசடிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி அளித்தது.
இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் மரண அடிவாங்கின. இதுவரை அதானி குழுமத்தின் பங்குள் 38 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஏறக்குறைய ரூ.8 லட்சம் கோடிக்கு மேல் அதானியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: மக்களவை ஒத்திவைப்பு
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த அதானி, ஒரே வாரத்தில் 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார். பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளுக்கு தினசரி வர்த்தகத்தில் மரண அடி விழுகிறது.
அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனம் சமீபத்தில் எப்பிஓ வெளியிட்டு ரூ.20ஆயிரம் கோடி திரட்டியது.இந்த எப்பிஓ விற்பனையையும் திடீரென அதானி குழுமம் நேற்று இரவு ரத்து செய்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குநிலை அடுத்து என்னவாகும் என்ற பதற்றத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர்.
இதற்கிடையே அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் கடன் கொடுத்துள்ளன. இந்த கடன் மதிப்பு ரூ.81 ஆயிரம் கோடிவரை இருக்கும் எனத்த கவல்கள் தெரிவிக்கின்றன
அதானி பவர் நிறுவனத்துக்கு சிக்கல்! கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
இந்த கடன் குறித்து கடந்த வாரம் விளக்கம் அளித்த எஸ்பிஐ வங்கி நிர்வாகம் “ அதானி குழுமத்துக்கு அளித்த கடனைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, எளிதாக வசூல் செய்யும் வகையிலான சொத்துக்கள் மீதுதான் கடன் வழங்கியுள்ளோம்”எ னத் தெரிவித்து.
இதற்கிடையே அதானியின் பங்கு மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து 1000 கோடி டாலர் குறைந்துவிட்டதையடுத்து, இந்திய வங்கிகள் நிலை அடுத்து என்ன என்ற கேள்வி எழுகிறது.
இதையடுத்து, பொதுத்துறை வங்கிகள், தனியார்வங்கிகள் அதானி குழுமத்துக்கு கொடுத்த கடன் விவரங்கள் என்ன, எவ்வளவு கடன் வழங்கியுள்ளார்கள், பிணையாக என்ன இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன