
வட்டிக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் பாவ செயல் என இஸ்லாம் கூறுவதால், இவர்களுக்கான தனி வங்கி தொடங்க வேண்டியதின் அவசியத்தை ரிசர்வ் வங்கி கடந்த 2௦15 – 16 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்து இருந்தது .
ரிசர்வ் வங்கியின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில்,மீண்டும் இஸ்லாமிய தனி வங்கி தொடர்பாக மத்திய அரசுக்கு நிதி சேவைக்கு , ரிசர்வ் வங்கி அறிக்கை அனுப்பி உள்ளது . அதற்கு தற்போது பதில் மனுவையும் ரிசர்வ் வங்கி பெற்றுள்ளது .
தகவல் அறியும் உரிமை சட்டம் :
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இஸ்லாமிய தனி வங்கி தொடர்பாக , மத்திய அரசின் நிதி பிரிவு என்ன பதில் அளித்தது என்பதை தெரிந்துகொள்ள, நிதி பிரிவு அனுப்பிய நகலை தருமாறு கோரி இருந்தது. ஆனால் இதற்கு பதில் அளிக்க மறுத்த ரிசர்வ் வங்கி , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்,இதற்கு விலக்கு உள்ளதாகவும் , அதனால் பதில் அளிக்க முடியாது எனவும் தெரிவித்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.