
இப்பவும் பழைய ரூபாய் நோட்டை மாற்ற முடியும் ...!
பழைய ரூபாய் நோட்டுக்கள் :
பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அவற்றை மாற்றிக்கொள்ள ஒரு புதிய வசதியை தற்போது மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
எங்கு எப்போது மாற்றலாம் ?
ரிசர்வ் வங்கி அலுவலங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 2.30 மணி வரை பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், அவற்றை மாற்றிக்கொள்ளவதற்கான காலக்கெடு ஜூன் 30, 2017 வரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தவசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ரூபாய் நோட்டை மாற்ற எந்தெந்த ஆவணங்கள் தேவை ?
பாஸ்போர்ட் நகல்,
அடையாளச் சான்று : ஆதார் அட்டை
பான் அட்டை நகர்,
நவம்பர் 8, 2016 முதல் டிசம்பர் 30, 2016 வரையான அனைத்து வங்கி பரிவர்த்தனைகளின் சான்று.அதாவது பேங்க் ஸ்டேட்மென்ட்.
யாரெல்லாம் இந்த வாய்ப்பு பயன்படுத்த முடியாது ?
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர்,வெளிநாட்டினர் மற்றும் நேபாளம், பூடான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த வாய்ப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக 25 ஆயிரம் வரை மட்டுமே மாற்ற முடியும் என்ற கட்டுப்பாடு
வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் போதே, அதிகபட்சமாக 25 ஆயிரம் வரை விமான நிலைய சுங்க சாவடிகளில் மாற்றிக்கொள்ளலாம். இன்னும் சொல்ல போனால், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் கூட , 25 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.