
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, வெளியிடப்பட்ட புதிய ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம், சட்டதிருத்தும் என வந்துக் கொண்டே இருக்கிறது .இதில் குறிப்பாக தியதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டில் 2000, 500 தாள்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது .
1௦௦௦ ரூபாய் தாள் இன்னமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதன் விளைவாக பணத்தட்டுப்பாடு இன்றும் நீடிக்கிறது . இது குறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா சில கருத்தை தெரிவித்தார் .
புதிய ரூபாய் நோட்டை அச்சிடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது என்றும், இதன் காரணமாக இன்னும் 3 மாதங்களில் இந்த பிரச்னை சரியாகிவிடும் என தெரிவித்துள்ளார்
தொடர்ந்துபேசிய அவர், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சில தொழிற்துறையில் மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.