
ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் 2022 ஜனவரி-மார்ச் வரையிலான கடைசிக் காலாண்டில் நிகர லாபம் 4.8சதவீதம் குறைந்து, ரூ.2,139 கோடியாகக் குறைந்துள்ளது.
நிறுவனத்தின் நிதிச் சூழலைக் கண்டறியும் EBIDTA கணக்கீடு 2.4 சதவீதம் அதிகரித்து ரூ.3,075 கோடியாக அதிகரித்துள்ளது.
2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 12 மாதங்கள் முடிவில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் அதிகரித்து ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. EBIDTA மதிப்பு 26சதவீதம் அதிகரித்து ரூ.12,381 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், கடந்த 2020-21ம் நிதியாண்டில் நிகர லாபம் 29 சதவீதம் அதிகரித்து, ரூ.7055 கோடியாக இருந்தது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துக்கு தற்போது 793 கிளைகளை கடந்த காலாண்டில் திறந்துள்ளது. இதன் மூலம் 15,196 கிளைகளுடன் ரிலையன்ஸ் ரீடெய்ல் செயல்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிகர வருவாய் 23.1 சதவீதம் உயர்ந்து, ரூ.50,834 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இரட்டை இலக்தத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக ஆடைகள், லைப்ஸ்டைல், பலசரக்குப்பிரிவு நன்றாகச் செயல்பட்டுள்ளன.
குடியரசுத் தினத்தன்று ரிலையனஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் விற்பனை கடந்த 2021ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகரித்தது எனத் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “ காலாண்டு வருவாய் சிறப்பாக வந்துள்ளது. ஒமைக்ரான் பரவல் இருந்தபோதிலும்கூட, கடைசிக் காலாண்டில் சிறப்பாகச் செயல்பட்டோம். ஒமைக்ரான் பரவலில் கூட விற்பனை அதிகரித்தது. பிப்ரவரி மார்ச் மாத விற்பனை கோடை காலத்துக்கு ஊக்கமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.