மறைந்த கோடீஸ்வரர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா மும்பையில் ரூ. 118 கோடி மதிப்பில் புதிய அப்பார்ட்மெண்டை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த கோடீஸ்வரர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா மும்பையில் ரூ. 118 கோடி மதிப்பில் புதிய அப்பார்ட்மெண்டை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு மும்பை மலபார் ஹில்லில் உள்ள வாக்கேஷ்வர் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் கிட்டத்தட்ட அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளையும் அவர் வாங்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேகா ஜுன்ஜுன்வாலாவின் அப்பார்ட்மெண்ட், கடலுக்கு எதிரே உள்ள ராக்சைட் சொசைட்டிக்கு பின்னால் உள்ளது, மேலும் அது மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.. ரேகா ஜுன்ஜுன்வாலா வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு 1666 சதுர அடி பரப்பளவில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் ரூ.58.81 லட்சம் முத்திரைக் கட்டணம் செலுத்தியுள்ளார். பரிமாற்ற பத்திரம் மார்ச் 15, 2024 அன்று பதிவு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ரேகா ஜுன்ஜுன்வாலா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 118 கோடி ரூபாய்க்கு 9 அடுக்குமாடி குடியிருப்புகளை வெவ்வேறு டீலர்களிடமிருந்து வாங்கியதாக பதிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த கட்டிடத்தில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்புகளில் 19ஐ அவர் குடும்பம் வாங்கியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு, ரேகா ஜுன்ஜுன்வாலா, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (பிகேசி) மற்றும் அந்தேரி வெஸ்டில் உள்ள சண்டிவாலி ஆகிய இடங்களில் 1.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள ஐந்து வணிக அலுவலக இடங்களை ₹739 கோடிக்கு வாங்கியிருந்தார்.
ஜுன்ஜுன்வாலா பங்குதாரராக இருக்கும் கின்டெயிஸ்டோ எல்எல்பி நிறுவனம் (Kinnteisto LLP), ஏற்கனவே பிகேசியில் உள்ள தி கேபிட்டலின் 14வது தளத்தில் சுமார் 26,422 சதுர அடி மற்றும் 30,172 சதுர அடியில் இரண்டு அலுவலகங்களை முறையே ₹123.99 கோடிக்கும் ₹145.32 கோடிக்கும் வாங்கியிருப்பதாக அக்டோபர் மாதம் அறிக்கை கூறுகிறது. .
ரேகா ஜுன்ஜுன்வாலா சொத்து மதிப்பு
மறைந்த பங்கு முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா, இந்தியாவின் மிகப்பெரிய தனிநபர் முதலீட்டாளர் ஆவார். ரேகா ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பு டிசம்பர் மாத இறுதியில் ரூ. 39,333.2 கோடிக்கு மேல் இருந்தது,
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மேலும் உயரப்போகிறது.. விரைவில் வெளியாக உள்ள ஜாக்பாட் அறிவிப்பு..
ரேகா ஜுன்ஜுன்வாலா முதலீடு
டாடா குழுமப் பங்குகளான டைட்டன் கம்பெனி மற்றும் டாடா மோட்டார்ஸ், கான்கார்ட் பயோடெக், அவர்களின் விளம்பரப்படுத்தப்பட்ட நிறுவனமான ஸ்டார் ஹெல்த் மற்றும் அதனுடன் இணைந்த காப்பீட்டு நிறுவனம் உட்பட முன்னணி நிறூவனங்கள் ரேகா ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ளார்.