மத்திய அரசு ஊழியர்களின் 18 மாதங்களுக்கான டிஏ அரியரும் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ என்று அழைக்கப்படும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போல் 18 மாதங்களுக்கு டிஏ அரியரும் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி ஊழியர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 40 – 45% ஓய்வூதியமாக கிடைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தில் கடைசி ஊதியத்தில் 38% என்ற அளவில் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.
ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஒரு பணியாளரின் கடைசி சம்பளத்தில் 50% எவ்வளவோ, அந்த அளவில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த சூழலில் தான் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 40- 45 % ஓய்வூதியமாக பெறும் வகையில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இவை தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வுடன், வீட்டு வாடகை கொடுப்பனவையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி X, Y, Z என்று 3 பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ள நகரங்களில் முறையே 27, 18, 9 சதவீதத்தின் அடிப்படையில் வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இதில் எல்லா பிரிவினருக்கும் பொதுவாக 3 % உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும் போது மட்டுமே வீட்டு வாடகை கொடுப்பனவு உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. வாடகை மற்றும் வட்டி பணத்தில் டிடிஎஸ் சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா.?
முன்னதாக மார்ச் முதல் வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஏப்ரல் மாத சம்பளத்திலேயே அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் அதிகரிக்கும். அதே போல் 18 மாத டிஏ அரியரும் விரைவில் வழங்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மேலும் சில ஜாக்பாட் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.