இந்த பங்குகள் மூலம் சில நிமிடங்களிலேயே ரூ.500 கோடி லாபம் ஈட்டிய ரேகா ஜுன்ஜுன்வாலா.. எப்படி தெரியுமா?

Published : Jul 08, 2023, 08:46 AM IST
இந்த பங்குகள் மூலம் சில நிமிடங்களிலேயே ரூ.500 கோடி லாபம் ஈட்டிய ரேகா ஜுன்ஜுன்வாலா.. எப்படி தெரியுமா?

சுருக்கம்

டைட்டன் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால், பெரும் முதலீட்டாளரான மறைந்த ராகேஜ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலாவுக்கு பெரும் லாபத்தை ஈட்டி கொடுத்தது

டாடா குழுமத்தின் ஜூன் காலாண்டு புதுப்பித்தலுக்குப் பிறகு, டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 3 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தன. நேற்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் டைட்டன் நிறுவனப் பங்குகள் 3.39 சதவீதம் உயர்ந்து ரூ.3,211.10 என்ற சாதனையை எட்டியது. டைட்டன் நிறுவனம், முந்தைய அமர்வில் ரூ. 275,720 கோடியிலிருந்து ரூ.9,357 கோடி அதிகரித்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2,85,077 கோடி சந்தை மூலதனத்தை ஈட்டியது.

டைட்டன் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததால், பெரும் முதலீட்டாளரான மறைந்த ராகேஜ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலாவுக்கு பெரும் லாபத்தை ஈட்டி கொடுத்தது. டைட்டன் நிறுவனத்தில் 5.29 சதவீத பங்குககளை கொண்டுள்ள ரேகாவுக்கு இதன் மூலம் ரூ.494 கோடி மதிப்பிலான லாபம் கிடைத்தது. டைட்டனின் முக்கிய நகை வணிகமானது கடந்த காலாண்டில் மொத்தம் 18 ஸ்டோர்களை புதிதாக திறந்ததால் அதன் மொத்த கடைகளின் எண்ணிக்கையை 559 ஆக உயர்ந்தது. இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 21 சதவீத வளர்ச்சி அடைந்தது.

1 கிலோ ரூ.9 கோடி! உலகின் மிகவும் விலை உயர்ந்த டீ இதுதான்.. ஏன் இவ்வளவு காஸ்ட்லி?

இதுகுறித்து டைட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்“இந்த காலகட்டத்தில் சராசரி அளவை விட வாங்குபவர்களின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. காலாண்டு முழுவதும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும், ஏப்ரலில் அக்ஷய திரிதியை விற்பனை மற்றும் ஜூன் மாதத்தில் திருமணத்திற்காக நகைகள் விற்பனை வலுவாக இருந்தது. தங்கம் மற்றும் பதிக்கப்பட்ட முக்கிய வகைகள் ஒட்டுமொத்த தயாரிப்பு கலவையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமல் நன்றாக வளர்ந்தன. புதிய ஸ்டோர் சேர்த்தல், தங்க அறுவடை மற்றும் பரிமாற்ற நிகழ்ச்சிகள் இந்த காலாண்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடாவின் தனிஷ்க் ஷார்ஜாவில் ஒரு புதிய கிளையை திறந்ததன் மூலம் வளைகுடா பிராந்தியத்தில் ஏழு கடைகள் மற்றும் அமெரிக்காவில் ஒரு கடை என அதன் சர்வதேச இருப்பை விரிவுபடுத்தியது. Titan's கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள்  13 சதவீத ஆண்டு வளர்ச்சியானது, அனலாக் வாட்ச்கள் பிரிவில் 8 சதவீத வளர்ச்சியையும், கைக்கடிகாரங்கள் பிரிவில் 84 சதவீத வளர்ச்சியையும் கொண்டுள்ளது.

"டைட்டன் மற்றும் சர்வதேச பிராண்டுகளின் விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டது. பிரீமியம் பிராண்டுகளுக்கான நுகர்வோர் விருப்பங்கள் கடிகாரங்களுக்கான சராசரி விற்பனை விலையில் நல்ல உயர்வுக்கு வழிவகுத்தது" என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

DA Hike : காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 5% அகவிலைப்படி உயர்வு - முழு விபரம்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Real Estate: விற்கப்படும் அப்ரூவல் இல்லாத வீட்டு மனைகள்! எப்படி வாங்கனும் தெரியுமா?
Gold Rate Today (December 10): நித்தம் நித்தம் நிலை மாறும் தங்கம் விலை.! கம்பெனி கொடுக்கும் வெள்ளி! என்ன செய்யலாம்!