பெரிய  சிக்கலில் ரியல்  எஸ்டேட் துறை...!!!  அடுத்த  அதிரடி ....!!!

First Published Nov 25, 2016, 2:28 PM IST
Highlights


பெரிய  சிக்கலில் ரியல்  எஸ்டேட் துறை...!!!  அடுத்த  அதிரடி ....!!!

மத்திய அரசின் அடுத்த அதிரடி   !!

E-Property Pass Book (EPPB)

அதாவது....மின்னணு சொத்து விபர கணக்குப் புத்தகம்   ( E-Property Pass Book (EPPB))

மத்திய அரசு, மேற்படி புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப் போகிறது.

வரும் 01/04/2017 முதல் 31/03/2018 வரை, அடுத்த ஒரு வருடத்திற்கு, இந்தியாவில் உள்ள அனைத்து நிலபுல சொத்துக்களின் விபரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யப்போவதால், அடுத்த ஒரு வருடத்திற்கு, யாரும் எந்த ஒரு சொத்துக்களையும் விற்கவோ வாங்கவோ முடியாது என  தகவல்  வெளியாகி உள்ளது.....

சொத்தின்  உரிமையாளர்கள்  செய்ய  வேண்டியது  என்ன ?

சொத்தின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும், பத்திரப் பதிவு அலுவலகத்தில் சென்று, தங்களது சொத்துப் பத்திரத்துடன், தங்களுடைய ஆதார் மற்றும் PAN எண்ணையும் EPPB என்ற மின்னணு சொத்து விபர புத்தகத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும்.

அவ்வாறு அடுத்த 31/03/2018 தேதிக்குள் இணைக்கப்படாத சொத்துக்கள் யாவும் அரசுக்குச் சொந்தமாகிவிடும்.

ஆதார் மற்றும் பான் ( PAN ) எண்ணுடன் இணைக்கப்பட்டபிறகு, சொத்துப் பரிவர்த்தனை அனைத்தும் GUIDE LINE VALUE  வில் ( அரசின் வழிகாட்டு மதிப்பில் ) மட்டுமே பத்திர பதிவு நடைபெறும் என்பது அரசின் திட்டம்.

பலன்  யாருக்கு ..?

எனவே, கையில் / வங்கியில் இருக்கும் பணத்தில், அடுத்து வரும் 31/03/2017 மார்ச் மாதக் கடைசி வரை யாரும் சொத்துக்கள் வாங்காமல்  இருந்தால், அதன்  பின்பு   அரசின்  GUIDE LINE VALUE  வின் மதிப்பில் சொத்துக்கள்  வாங்க  முடியும். இதனால்  குறைந்த  விலையில் இடத்தை  வாங்க  முடியும் .

அதே போல, விற்க நினைப்பவர்கள், முடிந்தவரை வரும் மார்ச் மாதக் கடைசிக்குள் விற்றால் , உங்களுக்கு பலன்  உண்டு. ..!!

இந்த  தகவலால் , பலரும் ஆழ்ந்த   சிந்தனையில்  உள்ளனர்.

 

 

 

click me!