இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு (MPC) கூட்டம் புதிய ஆர்பிஐ (RBI) ஆளுநர் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6.25% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு (MPC) கூட்டம் புதிய ஆர்பிஐ (RBI) ஆளுநர் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 6.25% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளில் வீட்டுக்கடன் மீதான வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்பு உள்ளது.
பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலைக்கு மத்தியில், சென்ற பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் கூடிய இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC), மே 2020க்குப் பிறகு முதல் முறையாக வட்டி விகிதக் குறைப்பை அறிவித்தது.
ஏப்ரல் 7 முதல் 9 வரை நடந்த கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து 6.00 சதவீதமாக குறைக்கும் என்று அனைத்து நிபுணர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
சீனாவுக்கு 104% வரி இன்று முதல் அமல்! டொனால்டு டிரம்ப் அதிரடி!
இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்கா 26 சதவீத வரியை விதித்துள்ளது. மேலும், 2025-26 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை ஆர்.பி.ஐ. 20 முதல் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரிசர்வ் வங்கியின் முந்தைய கணிப்பான 6.7 சதவீதத்திலிருந்து சுமார் 6.1 சதவீதமாகக் குறைக்க வாய்ப்புள்ளது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்ற நோக்கில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மேலும் குறைக்க முடிவு செய்ததற்கு இதுவே முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் சுமார் 6.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். "இது முந்தைய ஆண்டில் காணப்பட்ட 9.2 சதவீத வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும்" என்றும் அவர் கூறினார். விவசாயத் துறையின் நடப்பு ஆண்டு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.
UPI கிரெடிட் லோன்: இப்போது நீங்கள் யுபிஐ மூலம் கடன் பெறலாம்!