திங்களன்று சரிந்த இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டுள்ளது. டிரம்ப் வரி குறைப்பு பேச்சு, உலகளாவிய சந்தை உயர்வு, ஆர்பிஐ வட்டி விகிதம் போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது.
Share Market Today: 'கருப்பு திங்கள்' தினத்தை பார்த்த உலகம் மிரண்டு போய் இருக்கிறது. இதையடுத்து, இன்றைய இந்திய பங்குச் சந்தை வலுவான நிலையில் உள்ளது. இன்று இந்திய பங்குச் சந்தைகள் வலுவான மீட்சியைக் கண்டது. ஏனெனில் சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது, அதே நேரத்தில் நிஃப்டி 22,500 புள்ளிகளுக்கு மேல் இருந்தது. திங்களன்று இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் கடுமையான சரிவைக் கண்டதைத் தொடர்ந்து இந்த மீட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் இரண்டும் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்துள்ளது.
Trump Tariffs War with world: டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி உயர்வை அடுத்து ஜப்பான, சீனா, தென்கொரியா, இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் பங்குச் சந்தை பெரிய அடி வாங்கியது. இந்தியாவில் மட்டும் முதலீட்டாளர்கள் சுமார் 20 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர். பல்வேறு நாடுகளிலும் வர்த்தகம் குறித்த எந்த உறுதியான முடிவும் இல்லாமல், குழப்பம் ஏற்பட்டு இருப்பதால் இதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலக நாடுகளும் தயாராகி வருவதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமே வர்த்தகப் போரை தணிக்கும் என்ற எண்ணமும் எழுந்துள்ளது. இந்திய பங்குச் சந்தையின் இன்றைய ஏற்றத்திற்கு வர்த்தகர்களின் குறுகிய கால பங்கு விற்பனையும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வலுவான உலகளாவிய சந்தைகள், ரிசர்வ் வங்கி வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான பரபரப்பு செய்தி மற்றும் 2025 ஆம் ஆண்டின் சிறந்த காலாண்டு முடிவுகள் ஆகியவை இன்று இந்திய பங்குச் சந்தையை வலுவாக வைத்திருப்பதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
இந்த 4 துறைகளை நோட் பண்ணுங்க.. நல்ல லாபம் தரும் - தேவேந்தர் சிங்கால் பரிந்துரை!
இந்திய பங்குச் சந்தை இன்று ஏன் உயர்ந்து வருகிறது?
இந்திய பங்குச் சந்தை இன்று ஏன் உயர்ந்து வருகிறது என்பது குறித்து, பிராஃபிட்மார்ட் செக்யூரிட்டீஸ் ஆராய்ச்சித் தலைவர் அவினாஷ் கோரக்ஷ்கர் மின்ட் இணையத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், ''அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், (வியட்நாம் உட்பட) பல நாடுகள் வரி விதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். இது வர்த்தகப் போர் பதற்றத்தை தணித்துள்ளது. இன்று, ஜப்பானிய நிக்கேய் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை பெரிய இடைவெளியுடன் வர்த்தகத்தை துவங்கின. இது உலக சந்தைகளின் போக்கை மாற்றியுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் நிதி தொடர்பான கொள்கை கூட்டம் நடந்து வருகிறது இந்தக் கூட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்திற்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என்ற நிலைப்பாடும் இன்றைய வர்த்தகத்தை உயர்த்தியுள்ளது. இருந்தாலும், இன்னும் ஒரு குழப்பமான ந நிலையில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. டிரம்ப் உலக நாடுகளுடன் தெளிவான முடிவுகளை அறிவித்த பின்னர் இதற்கு முடிவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share Market: முதலீட்டாளர்களின் ரூ. 20 லட்சம் கோடி காலி; பங்குச் சந்தையின் இனி என்ன நடக்கும்?
இன்றைய பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்ன?
வர்த்தகப் போர் பதற்றம் தணிந்தது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரியால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நாடுகள் டிரம்புடன் வர்த்தகம் குறித்து பேசுவதற்கு முன் வந்துள்ளன. இதனால், பதற்றம் தணிந்துள்ளது. இந்தியாவும் விரைவில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இருந்து மிக சொற்ப அளவே அதாவது உள்நாட்டு உற்பத்தில் சுமார் இரண்டு சதவீதம் மட்டுமே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால், டிரம்பின் வரி விதிப்பு பெரிய அளவில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது.
வலுவான உலகளாவிய சந்தைகள்: திங்கட்கிழமை ரத்தக்களரியை கண்ட பிறகு, ஆசிய பங்குச் சந்தை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. ஜப்பானிய நிக்கேய் குறியீடு அதிகாலை அமர்வில் 5% அதிகமாக அதிகமாக உயர்ந்தது. ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு சுமார் 1.50% உயர்ந்தது. அதே நேரத்தில், பிற ஆசிய பங்குச் சந்தைகளும் வலுவான வர்த்தகத்தை கொண்டுள்ளன.
Short selling: 'Black Monday'-வுக்குப் பின்னர் Short selling வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை அதிக விலைக்கு விற்று பணம் பார்த்தனர். அதாவது இவர்கள் பங்குகள் குறைந்து இருக்கும்போது வாங்கி, பின்னர் விற்பார்கள். இதில் ரிஸ்க்கும் இருக்கிறது. குறைந்த விலையில் வாங்கி, அதற்கும் மேலும் விலை குறைந்தால் அவர்கள் அந்த இழப்பை ஏற்க வேண்டியது வரும். இந்த வர்த்தகத்தினால், கரடிகளுக்கு காளைகள் சரியான அடி கொடுத்தது.
ஆர்பிஐ வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கொள்கைக் கூட்டம் நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கி அடிப்படை வட்டி விகிதக் குறைப்பை 25 ஆக குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் வரி விதிப்புக்குப் பின்னர் நிலவும் பணப்புழக்கம் குறித்தும் ஆர்பிஐ ஆலோசித்து வருகிறது.
சிறந்த காலாண்டு 2025 முடிவுகள்: பெரும்பாலான இந்திய வங்கிகள் நான்காவது காலாண்டு முடிவுகள் குறித்து திருப்திகரமான பதில் அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது தொழில்களில் தேவை மற்றும் சப்ளை இரண்டும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. .