UPI123PAY: சாதாரண மொபைலில்கூட ஈஸியா பணம் அனுப்பலாம்: ஆர்பிஐ புதிய அறிமுகம்: முழு விவரம் இதோ

Published : Mar 08, 2022, 04:26 PM IST
UPI123PAY: சாதாரண மொபைலில்கூட ஈஸியா பணம் அனுப்பலாம்: ஆர்பிஐ புதிய அறிமுகம்: முழு விவரம் இதோ

சுருக்கம்

UPI123PAY:ஸ்மார்ட் ஃபோன், இன்டர்நெட் இல்லாமல் சாதாரண ப்யூச்சர்(பட்டன்) செல்போன் வைத்திருப்பவர்களும் யுபிஐ வசதி மூலம் ஒருவருக்கு அனுப்பும் வசதியை ரிசர்வ் வங்கி இன்று அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட் ஃபோன், இன்டர்நெட் இல்லாமல் சாதாரண ப்யூச்சர்(பட்டன்) செல்போன் வைத்திருப்பவர்களும் யுபிஐ வசதி மூலம் ஒருவருக்கு அனுப்பும் வசதியை ரிசர்வ் வங்கி இன்று அறிமுகம் செய்துள்ளது.

UPI123PAY

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் இந்த UPI123PAY(யுபிஐ123பிஏஒய்) எனும் வசதியை அறிமுகம் செய்தார்.
இந்தவசதி மூலம்  ப்யூச்சர் செல்போன் பயன்படுத்தும், இந்தியாவில் 40 பேர் கோடி பேர் எளிதாக ஒருவருக்கு பணம் அனுப்பமுடியும். இந்த யுபிஐ123பிஏஒய் திட்டத்தை அறிமுகம் செய்து, அந்ததிட்டத்துக்கான 24மணிநேரமும் இயங்கும் உதவி மையமத்தையும் ரிசர்வ் வங்கி கவர்னர் அறிமுகம் செய்தார். இந்த உதவி மையத்துக்கு “ டிஜிசக்தி”(Digisakthi)எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பட்டன் செல்போன்

இந்த வசதி மூலம் சமூகத்தில் நலிந்தபிரிவில் இருக்கும் மக்கள், கூலி வேலை செய்பவர்கள், கிராமப்புறங்களில் பட்டன் செல்போன் பயன்படுத்தும் மக்களும், இனிமேல் யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியும். பணம் அனுப்பவதற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 

இந்தியாவில் 118 கோடிபேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள். இதில் 74 கோடிபேருக்கும் அதிகமானோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எளிதாக யுபிஐ வசதி மூலம் எந்த இடத்திலிருந்தும் ஒருவருக்கு பணம் அனுப்பலாம். ஸ்மார்ட் போன் இருந்தால் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, ஸ்கேன் செய்து பணம் அனுப்புமுடியும்.

இன்டர்நெட் தேவையில்லை
ஆனால், சாதாரண ப்யூச்சர் போன் வைத்திருப்பவர்களால் பணம் அனுப்பவும், பெறவும் முடியாது.  அதுபோல், ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள யுபிஐ123பே மூலமும் 3 வழிகளில் எளிதாகபணம் செலுத்த முடியும். இதற்கு இணைய வசதியும், ஸ்மார்ட்போனும் தேவையில்லை. 
எப்படி அனுப்பலாம் தெரிந்து கொள்வோம்(UPI 123PAY)

பியூச்சர் மொபைல் போன் வைத்திருப்பவர்கள், 4 விதமான தொழில்நுட்பங்கள் மூலம் பணம் அனுப்ப முடியும். 

முதலாவதாக ஐவிஆர் எனப்படும் இன்டர்ஆக்டிவ் கால் ரெஸ்பான்ஸ் நம்பர் மூலம் அனுப்பலாம். இதன்படி என்பிசிஐ வழங்கும் எண்ணுக்கு அழைத்து பணப்பரிமாற்றத்தை செய்யலாம். இந்த அழைப்பு பாதுகாக்கப்பட்டதால் அச்சப்படத்தேவையில்லை. 

2-வதாக, பியூச்சர் போனில் இருக்கும் அப்ளிகேஷன் மூலம் அனுப்பலாம். இதற்கான ஆப்ஸை ரிசர்வ் வங்கி உருவாக்கி வருகிறது. 

 3-வதாக மிஸ்டுகால் கொடுத்து பணம் அனுப்பலாம். ரிசர்வ் வங்கி அளிக்கும் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அங்கிருந்து அந்த எண்ணிலிருந்துஅழைப்புவரும். அந்த அழைப்பில் பயன்படுத்துவோர் தங்களின் யுபிஐ பின் எண்ணைக் டைப் செய்து, பணம் அனுப்பலாம். 

4-வதாக சவுண்ட்பேஸ்டு பேமென்ட் மூலம் அனுப்புவது. இதன் மூலம், ஒலி அதிர்வுகள் மூலம் இரு செல்போன்களுக்கு இடையே தகவல்தொடர்பு உருவாக்கி பணம் அனுப்புவதாகும். 

உதவி எண்கள்

இந்த வசதி மூலம் தங்கள் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யலாம், மொபைல் பில்செலுத்தலாம், வங்கிக்கணக்கில் பண இருப்பு அறியலாம், பணம் அனுப்பலாம், வங்கிக்கணக்கை மொபைல் எண்ணுடன் இணைத்துவிட்டு இந்த வசதிகளைப் பெற முடியும். மேம்பட்ட பாதுகாப்பு அம்சம் இருப்பதால், அடிக்கடி யுபிஐ பின் எண்ணையும் மாற்றலாம்.

24மணிநேரமும் உதவுவதற்காக டிஜிசக்தி எனும் தளத்தையும் ரிசர்வ் வங்கி உருவாக்கிக் கொடுத்துள்ளது. டிஜிட்டல் பரிமாற்றம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும். 

இது தவிர பயன்பாட்டாளர்கள், www.digisaathi.info அல்லது14431 மற்றும் 1800 891 3333 ஆகிய இலவச செல்போன் எண்ணுக்கு அழைத்து பரிமாற்றம் தொடர்பான தகவல்களைப் பெறலாம்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!