
ரஷ்யா-உக்ரைன் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவை இருந்தபோதிலும்கூட, மும்பை, தேசியப்பங்குசந்தைகளில் வர்த்தகம் பெரும் ஊசலாட்டத்தில் இருந்து, இறுதியில் உயர்வுடன் வர்த்தகம் முடிந்தது.
கடந்த4 நாட்களாக பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்து வந்த முதலீட்டாளர்கள் இன்று உயர்வைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம், சர்வதேச சந்தையி் கச்சா எண்ணெய் விலை பேரல் 140 டாலராக உயர்ந்தது போன்ற காரணிகளால் கடந்த சில நாட்களாக மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது.
ஆனால், 5மாநிலத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகின.இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கணிப்புகள் வெளியானது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.
அதுமட்டுமல்லாமல் மோர்கன் அன்ட் ஸ்டான்லி ரேட்டிங் நிறுவனம், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை இப்போதுள்ள சூழலில் உயர்த்த வாய்ப்பில்லை எனக் கூறியது, முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இதனால் இன்று காலை மந்தமாகத் தொடங்கிய வர்த்தம் நேரம் செல்லச் செல்ல சூடு பிடித்தது. பிற்பகலுக்குப்பின் முதலீட்டாளர்கள் ஆர்வமாக பங்குகளை வாங்கிக் குவித்ததால், சந்தையில் ஏற்றமான சூழல் காணப்பட்டது.
மும்பைப் பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 581 புள்ளிகள் உயர்ந்து, 53,424 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 150 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,013 புள்ளிகளில் நிலைபெற்றது.
மும்பைப் பங்குச்சந்தையில் 30 முக்கியநிறுவனப் பங்குகளில் 5 பங்குகள் மட்டுமே சரிந்தன. மற்றநிறுவனப் பங்குகள் லாபத்தில முடிந்தன. ரிலையன்ஸ், பவர்கிரிட், டைட்டன், டாடா ஸ்டீல் உள்ளிட்ட 5 பங்குகள் இழப்பில் முடிந்தன.
உலோகத்துறை பங்குகள் இன்று சரிவில் முடிந்தன. ஆனால், கவல்தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, மருந்துத்துறை பங்குகள் லாபத்தில் முடிந்தன. டிசிஎஸ், டெக்மகிந்திரா, இன்போசிஸ், என்டிபிசி, பவர்கிரிட் கார்பரேஷன், சன்ஃபார்மா, இந்தியன் வங்கி உள்ளிட்ட பங்குகள் லாபமடைந்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.