வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், முந்தைய அளவிலான 6.5 சதவீதத்திலேயே வட்டி விகிதம் தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.. தொடர்ந்து 7-வது முறையாக ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதம் என்ற அளவிலேயே நிலை நிறுத்தி உள்ளது. இதனால் வீடு, வாகனங்களுக்கான மாதாந்திர தவணையில் எந்த மாற்றமும் இருக்காது.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதனால் ரெப்போ வட்டி விகிதம் உயரும் போது வீடு, வாகன கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்கும். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
undefined
6 அலவன்ஸ்களில் மாற்றம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. என்னவெல்லாம் தெரியுமா?
இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சக்திகாந்த் தாஸ், “நிதிக் கொள்கைக் குழு கொள்கை விகிதத்தை மாற்றாமல் 6.5% ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. கடந்த 6 கூட்டங்களில் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்துள்ளது. 5:1 என்ற பெரும்பான்மையுடன் முடிவு எடுக்கப்பட்டது.” என்று கூறினார்.
எவ்வளவு காலம் வீட்டுக் கடன் வட்டி சுமை அப்படியே இருக்கும்?
கடன் வாங்குபவர்கள் இன்னும் சில மாதங்களுக்கு அதிக வட்டி விகிதங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் ஆறுதல் மண்டலத்திற்குள் இருக்கும் அளவிற்கு குறையும் போது, வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம். பணவீக்கம் 4 சதவீத இலக்கை விட தொடர்ந்து நீடிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர்தெரிவித்துள்ளார்.
Forbes richest list 2024 : முதலிடத்தில் முகேஷ் அம்பானி.. டாப் 10 இந்திய கோடீஸ்வரர்கள் லிஸ்ட் இதோ..
பணவீக்கம் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியது என்ன?
சக்திகாந்த தாஸ் இதுகுறித்து பேசிய போது “ ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மொத்த பணவீக்கம் 5.1% ஆக குறைந்துள்ளது, மேலும் இது டிசம்பர் மாதத்தில் 5.7% ஆக இருந்த முந்தைய உச்சத்தில் இருந்து இந்த இரண்டு மாதங்களில் 5.1% ஆக குறைந்துள்ளது. வலுவான வளர்ச்சி வாய்ப்புகள், பணவீக்கத்தில் கவனம் செலுத்துவதற்கும், அதன் இலக்கை 4% க்கு இறங்குவதை உறுதி செய்வதற்கும் கொள்கை இடத்தை வழங்குகிறது.” என்று கூறினார்.
ரெப்போ விகிதங்கள் நிலையானதாக இருந்தாலும், புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு HDFC வங்கி வீட்டுக் கடன் விகிதங்களை 35 அடிப்படை புள்ளிகள் (bps) உயர்த்தி உள்ளது. ஆக்சிஸ் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளும் தங்களது புதிய வீட்டுக் கடன் விகிதங்களை 5 பிபிஎஸ் உயர்த்தியுள்ளன.