கடனுக்கான வட்டி வீதத்தை மீண்டும் 50 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார்.
கடனுக்கான வட்டி வீதத்தை மீண்டும் 50 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார்.
இதன்படி கடனுக்கான வட்டிவீதம் 5.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரிசர்வ் வங்கி சார்பில் இரு மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. கடந்த மே மாதம் கடனுக்கான வட்டியை 40 புள்ளிகளும், கடந்த இரு மாதங்களுக்குமுன் நடந்த நிதிக்கொள்கை ஆய்வுக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வட்டிவீதம் மேலும் 50 புள்ளிகளை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. இதன்படி கடனுக்கான வட்டிவீதம் தற்போது 4.90சதவீதமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் பணவீக்கம் அடுத்த 3 காலாண்டுகளுக்கும் இருக்கும், ஏறுமுகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் பார்த்தால் இனி வரும் நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், கடனுக்கான வட்டியை 50 புள்ளிகள் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் 5.15 சதவீதம்தான் வட்டி இருந்தது அதைவிட தற்போது அதிகரித்து 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. கடந்த மே மாதம் 40 புள்ளிகளும், ஜூன் மாதத்தில் 50 புள்ளிகளும் உயர்த்திய நிலையில் ஆகஸ்டில் மீண்டும் 50 புள்ளிகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த 6 சதவீதமாக இலக்கு வைத்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பணவீக்கம் தொடர்ந்து 6 சதவீதத்தைக் கடந்து வருகிறது. இதையடுத்து, கடனுக்கான வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. ஏற்கெனவே இருமுறை வட்டிவீதத்தை உயர்த்தியும், பணவீக்கம் 7 சதவீதமாகத்தான் குறைந்துள்ளது. இன்னும் பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை.
அதுமட்டுமல்லாமல் மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 15-வது மாதமாக இரட்டை இலக்கத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 15.18 சதவீதமாக அதிகரித்தது.
இங்கிலாந்திலும் பணவீக்கம் கடுமையாக அதிகரி்த்துள்ளது. இதையடுத்து, 50 புள்ளிகளை வட்டியில் உயர்த்தியதுபேங்க் ஆப் இங்கிலாந்து. இது கடந்த 27 ஆண்டுகளிலல் முதல்முறையாக இந்த அளவு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியும் தொடர்ந்து 2வது முறையாக வட்டிவீதத்தை 75 புள்ளிகள் சமீபத்தில் உயர்த்தியது. இதனால், அமெரிக்காவிலும் வட்டிவீதம் 2.25 முதல் 2.50வரை அதிகரித்துள்ளது.