
இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு 2024 -25 ஆம் நிதியாண்டிற்கான டிவிடெண்ட் தொகையை கொடுப்பதாக அறிவித்துள்ளது.அதன்படி மத்திய அரசுக்கு 2 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கவுள்ளது. மத்திய அரசுக்கு 2024-25 ஆம் நிதியாண்டிற்கான டிவிடெண்ட் தொகையை இந்திய ரிசர்வ் வங்கி, அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி டிவிடெண்ட் கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியால் செலுத்தப்பட்ட அதிகப்படியான ஈவுத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார சூழல்
சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதார சூழ்நிலையை ஆராய்ச்சி செய்ததன் அடிப்படையில், எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படியில் டிவிடெண்ட் விடுவிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் 4 புள்ளி 4 சதவீத நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசுக்கு இந்த உபரித் தொகை உதவியாக இருக்கும் எனவும் RBI தெரிவித்துள்ளது. மேலும் திருத்தப்பட்ட ECF அடிப்படையில், மற்றும் மைக்ரோ பொருளாதாரத்தை மனதில் கொண்டு CRB விகிதத்தை 6.5 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாக உயர்த்துவதாகவும் சிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஆண்டு ஆண்டு மாறுபடும் டிவிடெண்ட்
2024 நிதியாண்டில், ரிசர்வ் வங்கி அரசுக்கு ரூ.2.1 லட்சம் கோடி ஈவுத்தொகையை அறிவித்து மிகப்பெரிய அறிவிப்பாகும். அதற்கு முன்பு, 2022-23 நிதியாண்டில், ரிசர்வ் வங்கி ரூ.87,416 கோடி டிவிடெண்டை அரசுக்கு செலுத்தியது. நிதியாண்டில் அரசுக்கு உபரி பரிமாற்றம் ரூ.2.5-3.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
உள்கட்டமைப்பு பணிகளை செய்ய வேண்டும்
ரிசர்வ் வங்கியால் விடுவிக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 69 ஆயிரம் கோடி மதிப்பிலான டிவிடெண்டை கொண்டு மத்திய அரசு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு வழிகளில் கிடைக்கும் நிதிகளை மாநில அரசுகளுக்கு பாரபட்சம் இல்லாமல் பிரித்து கொடுத்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் எனவும், தொழில்துறையில் முதலீடுகளை மேற்கொண்டால் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.