
பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவளித்தாகவும், ஆயுதங்கள் வழங்கியதாகவும் வெளியாகியுள்ள தகவல் இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் துருக்கியால் வழங்கப்பட்டவை என கூறப்படுகிறது. துருக்கிக்கு பயணம் செய்வதையும், அந்நாட்டிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதையும் புறக்கணிக்க வேண்டும் என பல்வேறு வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், மத்திய அரசு துருக்கியுடன் அனைத்து வர்த்தக உறவுகளையும் முடிவுக்கு கொண்டு வந்தால், பல முக்கிய பொருட்களின் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்பிள் (Marble)
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மார்பிள்களில் 70 சதவீதம் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அவற்றில் விலை உச்சத்தை தொடும். மார்பிள் பயன்படுத்தாத வீடுகளே இல்லை என்ற நிலையில், இது கட்டுமானத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்கள் பெரும்பாலும் வெளிப்புற தோற்றத்தை விட interior design-னில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், இது அவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்ப்டுத்தும்.
ஆப்பிள் பழங்கள்
துருக்கியில் இருந்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரம் டன் ஆப்பிள் இறக்குமதி செய்யப்படுகிறது. காஷ்மீர் மற்றும் ஊட்டியில் அதிக அளவில் ஆப்பிள் விளைவிக்கப்பட்டாலும், உள்ளாட்டு தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதியில் அதிக அளவு துருக்கியில் இருந்து வருவதால் ஆப்பிள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கம்பளி துணிகள்
குளிருக்கு இதம் அளிக்கும் கம்பளி ஆடைகள் அதிக அளவில் துருக்கியில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா மற்றும் துருக்கி இடையே வர்த்தக தொடர்புகள் நிறுத்தப்பட்டால் கம்பளி ஆடைகள் மற்றும் தரை விரிப்புகள் விலை உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அழகுபடுத்தும் உபகரணங்கள் (Decorative Items)
துருக்கியின் கைதிறன் கொண்ட கலைப்பொருட்கள், மோசைக் விளக்குகள், சுவரோவியங்கள் போன்றவை இந்திய சந்தையை அதிகம் ஆக்கிரமித்துள்ளன. இதனால் அவற்றில் விலை ஏற்றம் ஏற்படும்
Furniture
வீடு மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் Furniture பொருட்கள் இந்தியாவிற்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அவற்றின் விலையிலும் மாற்றம் ஏற்படும்
செர்ரி மற்றும் உலர்ந்த பழங்கள்
இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர் அத்தி, உலர் திராட்சை போன்றவைகளில் 50 சதவீதம் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அவற்றின் விலையும் உச்சம் தொடும், மசாலா மற்றும் ஹெர்பல் டீ, பாரம்பரிய செராமிக் டைல்ஸ், நகை மற்றும் ஃபாஷன் உபகரணங்கள் கைதையல் நகைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் சாக்லேட் ஆகியவற்றின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.