500 , 1000 ரூபாய் நோட்டில் “பிளைவுட்” தயாரிப்பு ..!!!  “கொட்டே‌ஷன் “ கேட்டு ரிசர்வ் வங்கி அதிரடி ..!!!

Asianet News Tamil  
Published : Nov 30, 2016, 04:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
500 , 1000 ரூபாய் நோட்டில் “பிளைவுட்” தயாரிப்பு ..!!!  “கொட்டே‌ஷன் “ கேட்டு ரிசர்வ் வங்கி அதிரடி ..!!!

சுருக்கம்

500 , 1000 ரூபாய் நோட்டில் “பிளைவுட்” தயாரிப்பு ..!!!  “கொட்டே‌ஷன் “ கேட்டு ரிசர்வ் வங்கி அதிரடி ..!!!

நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி இரவு அறிவித்ததை  தொடர்ந்து, தற்போது, மக்கள் தங்களிடம் உள்ள செல்லாத  பணத்தை, தங்கள் வங்கி கணக்கில்  செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு   திரும்பப்பெறப்படும் செல்லாத  நோட்டுகளை,  அந்தந்த  வங்கிகள்  ரிசர்வ்  வங்கிக்கு அனுப்பி வைக்கின்றது.

இவ்வாறு   மலை போல்  குவியும் பழைய  நோட்டுகளை  என்ன செய்வது என்று  பல  யோசனைகள்  செய்து வருகிறது  ரிசர்வ் வங்கி. மேலும்   செல்லாத   நோட்டுகளை , ஒன்றாக  சேர்த்து  எரித்து  விடவும்  முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,  தற்போது, இந்த செல்லாத  நோட்டுகளை மரக்கூழுடன் இணைத்து தரமான பிளைவுட், ஹாட்போர்டு மற்றும் சாப்ட் போர்டு ஆகியவற்றை தயாரிக்க, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள வல்லப்பட்டினத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று புதிய யோசனை தெரிவித்து உள்ளது.

இந்த  யோசனையை  திருவனந்தபுரத்தில் இயங்கி வரும், ரிசர்வ் வங்கிக்கு  தெரிவித்துள்ளது. அவர்கள் இது தொடர்பாக கொட்டே‌ஷன்  கேட்டுள்ளதாக  தெரிகிறது

இந்த நிறுவனம் ஏற்கனவே இது போல கிழிந்த மற்றும் செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் இருந்து பெற்று பிளைவுட் தயாரித்து உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.





 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture: இனி மழைக்காலத்திலும் தக்காளி அழுகாது.! விவசாயிகளுக்கு லாபம் தரும் புதிய தொழில்நுட்பம்!
Laptop: புதிய ஆண்டில் லேப்டாப் வாங்கப் போறீங்களா? இதோ உங்களுக்கான பெஸ்ட் ஆப்ஷன்கள்!