
டிசம்பர் 30 ஆம் தேதியே கடைசி.....!!! மத்திய அரசு திட்டவட்டம் ....!!!
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல அதிரடி மாறுதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களிடம் உள்ள பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30 ஆம் தேதியே கடைசி நாள் என ஏற்கனவே அறிவித்து இருந்தது.
மேலும், குறிப்பிட்ட தேதிக்குள் , பழைய நோட்டுகளை மாற்றா விட்டால் , மார்ச் மாதம் வரை கால அவகாசம் நீடித்து , ரிசர்வ் வங்கியில் மட்டுமே, சரியான ஆவணத்தை கொடுத்து டெபாசிட் செய்ய முடியும் என தெரிவிக்கபட்டிருந்தது.
இந்நிலையில், தேவையான அளவுக்கு ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற வங்கிகளில் பணம் இருப்பதால், பழைய நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு டிசம்பர் 30 ஆம் தேதியே கடைசி நாள் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.........
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.