
2022ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் உலகளவில் அதிகமான மொபைல் கேம் வருமானத்தை சீனாவின் டென்சென்டின் பப்ஜி மொபைல் கேம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரியில் மட்டும் 23.70 கோடி டாலர் வருமானம்ஈட்டியுள்ளது.
சென்சார் டவர் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலில் “ பப்ஜி மொபைல் கேம் வருவாயில் 64 சதவீதம் சீனாவிலிருந்து கிடைக்கிறது. அடுத்தார்போல் அமெரி்க்காவிலிருந்து 8% வருமானும் துருக்கியிலிருந்து 7 சதவீதமும்கிடைக்கிறது.
2-வதாக டென்சென்டின் ஹானர் ஆஃப் கிங்ஸ் உலகளவில் ஜனவரி மாதத்தில் 23.32 கோடி டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதில் 96 சதவீத வருவாய் சீனாவிலிருந்தும், தைனாவிலிருந்து 2 சதவீதமும் கிடைத்துள்ளது. அடுத்ததாக மிஹோயோ ஜென்ஸின் இம்பாட், ரோப்லாக்ஸ் கார்ப்பரேஷனின் கிங், ராப்லாக்ஸ் ஆகிய மொபைல் கேம்கள் வருமானத்தை ஈட்டியுள்ளன.
கடந்த ஜனவரி மாதத்தில் உலகளவில் மொபைல் கேமுக்கான சந்தை மட்டும் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளேயிலிருந்து 740 கோடி கோடி டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே ஜனவரி மாதத்தை விட 7 சதவீதம் குறைவாகும். இதில் அமெரிக்காவில் மட்டும் கடந்த ஜனவரிலி் 210 கோடி டாலர் வருமானம் கிடைத்துள்ளது. உலகளவில் மொபைல் கேமுக்கு செலவிட்டதில் 28 சதவீதம் அமெரிக்கிலிருந்து செலவிடப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து 19.3சதவீதமும், அதைத்தொடர்ந்து சீனாவிலிருந்தும் 17.8 சதவீதமும் மொபைல் கேமுக்கு அதிகமாகச் செலவிடப்பட்டுள்ளது.
ஜென்ஷின் இம்பாக்ட் வீடியோ கேம் அதிகமானோரை ஈர்த்துள்ளது. ஜனவரியில் 20.87 கோடி டாலர் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைவிட இது 37 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69ஏ பிரிவின் கீழ் பப்ஜி மொபைல் கேம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையான்மைக்கும், ஒற்றுமைக்கும் இடையூறாக இருப்பதால், இதை மத்தியஅ ரசு தடை செய்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.