வீட்டுக் கடன் அதிகரிப்பால் இந்த 8 நகரங்களில் உள்ள சொத்து தற்போது விலை உயர்ந்துள்ளது. அது என்னென்ன நகரங்கள் என்பதை பார்க்கலாம்.
நீங்கள் ஒரு வீட்டை வாங்க நினைத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது இது. வங்கிகளின் வட்டி விகிதங்களின் அதிகரிப்பால் இந்த எட்டு நகரங்களில் சொத்து விலைகள் ஒரே இரவில் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், அது தொடர்பான அப்டேட்களை தெரிந்து கொள்வோம்.
நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் ஆலோசகர் நைட் ஃபிராங்க் இந்தியா சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விலையுயர்ந்த வீட்டுக் கடன்கள் காரணமாக, 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சொத்து விகிதங்கள் அதிகரித்துள்ளன. 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நாட்டின் எட்டு நகரங்களுக்கான 'மலிவுத்திறன் குறியீட்டை' நைட் ஃபிராங்க் வெளியிட்டார்.
முதல் எட்டு நகரங்களில், அகமதாபாத் 23 சதவீத விகிதத்துடன் மிகவும் மலிவு விலையில் உள்ள வீட்டுச் சந்தையாகும், அதைத் தொடர்ந்து புனே மற்றும் கொல்கத்தா 26 சதவீதத்துடன் உள்ளன. பெங்களூரு மற்றும் சென்னை 28-28 சதவீதம்; டெல்லி-என்சிஆர் 30 சதவீதம்; ஹைதராபாத் 31%; மேலும் மும்பை 55 சதவீதமாக உள்ளது.
இது தவிர, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில், தேசிய தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள குருகிராமில் உள்ள விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் சராசரி வாடகை ஆண்டு அடிப்படையில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட Savills India அறிக்கை, “குருகிராமில், அனைத்து சந்தைகளிலும் வாடகை ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக 28 சதவீதம் அதிகரித்துள்ளது. GCER (கோல்ஃப் மைதான விரிவாக்க சாலை) மற்றும் SPR (சதர்ன் பெரிஃபெரல் ரோடு) ஆகியவற்றில் அதிகபட்சமாக 33 சதவீதமும், கோல்ஃப் கோர்ஸ் சாலையில் 31 சதவீதமும் அதிகரித்துள்ளது.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!