
இன்றைய காலத்தில் பலரும் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதோடு, நல்ல வளர்ச்சியும் பெற வேண்டும் என்று விரும்புபவர்கள். ஆனால் பங்குச் சந்தை, கிரிப்டோ போன்ற ஆபத்தான முதலீடுகள் அனைவருக்கும் பொருந்தாது. இத்தகைய சூழலில், அரசு ஆதரவுடன் இயங்கும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே மீண்டும் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, எந்த ரிஸ்க்கும் இல்லாமல் வட்டியிலேயே லட்சக்கணக்கில் வருமானம் தரும் ஒரு திட்டமாக போஸ்ட் ஆபீஸ் ஆர்டி (Recurring Deposit) திட்டம் பார்க்கப்படுகிறது.
இந்த ஆர்டி திட்டம் முழுமையாக மத்திய அரசால் நடத்தப்படுவதால், முதலீடு செய்த பணம் பாதுகாப்பாக இருக்கும். சந்தை ஏற்றத்தாழ்வுகள், நஷ்டம் போன்ற கவலைகள் இதில் இல்லை. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், மாத சம்பளத்தில் இருந்து சேமிக்க நினைப்பவர்கள், குடும்பப் பொறுப்புகள் உள்ளவர்கள் அனைவருக்கும் இது ஏற்ற திட்டமாகும். உங்கள் முதலீட்டுக்கு உத்தரவாதமும், வட்டிக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த ஆர்டி கணக்கின் முதிர்ச்சி காலம் 5 ஆண்டுகள். ஆனால், இதனை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால் கிடைக்கும் பலன் அதிகம்.
இந்த திட்டம் கீழ்க்கண்ட இலக்குகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்:
• குழந்தைகளின் கல்வி
• திருமண செலவுகள்
• ஓய்வுக்கால சேமிப்பு
• பாதுகாப்பான நீண்டகால முதலீடு
போஸ்ட் ஆபீஸில் ஆர்டி கணக்கு தொடங்குவது எளிது. குறைந்த முதலீடு, அரசு உத்தரவாதம், நிலையான வட்டி என மூன்றும் சேர்ந்த இந்த திட்டம், பாதுகாப்பாக செல்வம் உருவாக்க நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.