ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? இந்தத் திட்டத்தில் இணைவது எப்படி?

By SG Balan  |  First Published Aug 17, 2024, 4:00 PM IST

இந்தியக் குடிமகனாக இருக்கும் அனைவரும் ஜன் தன் கணக்கு தொடங்கலாம். ஜன் தன் கணக்கு (PMJDY) தொடங்குபவர்களுக்கு 10 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். இது தவிர, ஏற்கெனவே வங்கி கணக்கு வைத்திருக்கக் கூடாது என்பது முக்கிய நிபந்தனை ஆகும்.


பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டம் 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. சேமிப்பு, காப்பீடு, கடன், ஓய்வூதியம் போன்ற பல வங்கி சேவைகள் இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க சில அடிப்படையான நிபந்தனைகள் உள்ளன. இந்தியக் குடிமகனாக இருக்கும் அனைவரும் ஜன் தன் கணக்கு தொடங்கலாம். ஜன் தன் கணக்கு தொடங்குபவர்களுக்கு 10 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். இது தவிர, ஏற்கெனவே வங்கி கணக்கு வைத்திருக்கக் கூடாது என்பது முக்கிய நிபந்தனை ஆகும். நாடு முழுவதும் உள்ள எல்லா வங்கிகளிலும் ஜன் தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம்.

Tap to resize

Latest Videos

பள்ளி மாணவர்களுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை ஸ்காலர்ஷிப்! விண்ணப்பிப்பது எப்படி?

ஜன் தன் கணக்கில் சிறப்பு அம்சங்கள்:

வங்கிக் கணக்கு இல்லாதவருக்கு ஒரு கணக்கு உருவாக்க இந்தத் திட்டம் உதவுகிறது. இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய தேவையில்லை. இதனால் ஜன் தன் கணக்கு ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜன் தன் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு சேமிப்புக் கணக்குக்கான வட்டி விகிதம் கிடைக்கும். ஜன் தன் கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் ரூபே (RuPay) டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏடிஎம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கு தகுதியுடையவர்கள். ஆகஸ்ட் 28, 2018க்கு முன் தொடங்கப்பட்ட ஜன் தன் கணக்குகளுக்கு ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். அதன்பிறகு தொடங்கப்பட்ட ஜன் தன் கணக்குகளுக்கான காப்பீடுத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரிசையாக வரும் வார இறுதி விடுமுறை... இந்திய ரயில்வே வழங்கும் சூப்பர் டூர் பேக்கேஜ்!

ஜன் தன் கணக்கின் பலன்கள்:

ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY), பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY), அடல் பென்ஷன் யோஜனா (APY), முத்ரா (MUDRA) திட்டம் ஆகியவற்றில் பயனடைய முடியும்.

இது தவிர டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி கிடைக்கும். இலவச காப்பீடு கிடைக்கும். அரசுத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் மானியங்கள் ஜன் தன் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.

ரூ.10,000 ஓவர் டிராஃப்ட் வசதியும் வழங்கப்படுகிறது. ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கில் பணம் இல்லாதபோது, அவசரத் தேவை ஏற்பட்டால் இந்த ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் உடனடியாக பணத்தை எடுத்துகொள்ள முடியும்.

ஜன் தன் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை:

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் உள்ள நிகர இருப்புத் தொகை 2023-24 நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவு ரூ.36,153 கோடியாக உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு ஜன் தன் கணக்கில் ரூ.4,524 பேலன்ஸ் இருக்கிறது என சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2024ஆம் நிதி ஆண்டில் 33 மில்லியன் புதிய ஜன் தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 519.5 மில்லியன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜன் தன் கணக்குகளின் மொத்த இருப்பு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.1,98,844 கோடியாக இருந்தது. இப்போது, ரூ.2,34,997 கோடியாக அதிகரித்துள்ளது.

ஆப்பிளுக்கு இப்படி ஒரு சென்டிமெண்ட் இருக்கா? ஐபோன் 16 ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா?

click me!