பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா சோலார் கூரைத் திட்டத்திற்கான பதிவுகள் தொடங்குகியுள்ளது. விண்ணப்பிப்பது எப்படி? அதற்கு தேவையானவை என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனாக்கான பதிவை அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் சோலார் பேனல்களை நிறுவ நிதி உதவி வழங்க உதவும். பத்திரிக்கை தகவல் பணியகத்தின் (PIB) வெளியீட்டின்படி, “அஞ்சல்காரர்கள் பதிவு செய்வதில் குடும்பங்களுக்கு உதவுவார்கள். தூய்மையான, செலவு குறைந்த ஆற்றல் எதிர்காலத்திற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து நபர்களையும் ஊக்குவிக்கிறோம்.
பதிவு செய்வதற்கு தபால்காரர்கள் குடும்பங்களுக்கு உதவுவார்கள். மேலும் தகவலுக்கு, https://pmsuryaghar.gov.in/ ஐப் பார்வையிடவும் அல்லது பகுதி தபால்காரரைத் தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் என்று தெரிவித்துள்ளது.
பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா: திட்டம் என்ன?
இத்திட்டத்தின்படி கூரையில் சூரிய ஒளி மின்சாரம் அமைக்கும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும், அதன் படி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்.
மானியத் தொகை என்ன?
இத்திட்டம், தற்போதைய முக்கிய விலையில், 1 கிலோவாட் சிஸ்டத்திற்கு ₹30,000 மானியத்திலும், 2 கிலோவாட் சிஸ்டத்திற்கு ₹60,000 மற்றும் 3 கிலோவாட் அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு ₹78,000 மானியத்திலும் வழங்கப்படும்.
திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?