
இந்தியாவின் உயிரி-பொருளாதாரம்(பயோ-எக்கானமி) கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடுதெரிவித்தார்.
பயோ-டெக் ஸ்டார்ட்அப்களின் 2 நாட்கள் கண்காட்சியை காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் உயிரி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் 8 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளு. கடந்த 2014ம் ஆண்டில் 1000 கோடி டாலராக இருந்த பயோ-பொருளாதாரம், கடந்த 8 ஆண்டுகளில் 8000 கோடி டாலராக வளர்ச்சி அடைந்துள்ளது.உலக உயிரி தொழில்நுட்பத்தில் முதல் 10 இடங்களில் உள்ளநாடுகள் வரிசையில் இந்தியா இடம் பெறுவதற்கு நீண்ட காலம் தேவைப்படாது.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையும், நூற்றுக்கணக்கில இருந்தது, இப்போது, 70ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தொழில்செய்வது எளிது என்ற கோட்பாட்டுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது, தொழில்முனோவர் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தி வருகிறது.
தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு துறையையும் வலுப்படுத்தவே மத்திய அரசு எண்ணுகிறது. முந்தைய அணுகுமுறையான சில துறைகளைப் புறக்கணித்துவிட்டு, மற்றவற்றை மட்டும் கவனிக்கும் போக்கு மாறிவிட்டது.
சில துறைகளில் இருந்து ஏற்றுமதி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. நாட்டில்வளர்ச்சி அடைந்துவரும் ஒவ்வொரு துறைக்கும் ஆதரவு அளிப்பது அவசியம். இந்தியாவின் வளர்ச்சிக்கு உயிரிதொழில்நுட்பத்துறை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
இந்திய ஐடி பணியாளர்களின் திறமை, மற்றும் புத்தாக்க சிந்தனைகளில் உலகளவில் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல நாட்டின் பயோடெக் துறையிலும் நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது.
பல்வேறுபட்டமக்கள், பல்வேறு காலநிலைகள், திறமையான இளைஞர்கள், எளிதாகத் தொழில்செய்வதை ஊக்குவித்தல், இந்தியாவின் பயோ-பொருட்களுக்கான தேவை அதிகரித்தல் இந்த அம்சங்கள்தான் இந்தியா வெற்றிப்பாதையை நோக்கி செல்ல வைக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.