ஆதார் தொடர்பான சேவைகளை, ஆதார் பயனாளிகள் வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளும் விரைவில் செயல்படுத்த ஆதார் வழங்கும் யுஐடிஏஐ(uidai) அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைவுத் தபாலில் அனுப்புவது மட்டுமல்லாமல், தபால்அலுவலர் ஆதார் சேவைகளை வீட்டுவாசலில் வந்து வழங்குவார்.
இந்த புதிய திட்டத்துக்காக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 48ஆயிரம் தபால் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டின் தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்குச் சென்று ஆதார் எண், மொபைல் எண்இணைத்தல், விவரங்களை சேர்த்தல், குழந்தைகள் தொடர்பான விவரங்களை சேர்த்தல் ஆகியவை செய்யப்பட உள்ளன.
2-வது கட்டத்தில் இந்தத் திட்டத்தில் 1.50 லட்சம் அஞ்சல ஊழியர்கள் இணைக்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆதார் சேவை அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதாகும்.
இதுகுறித்து யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இந்தத் திட்டத்தில் அஞ்சல ஊழியர்களுக்கு டிஜிட்டல் தொடர்பான லேப்டாப் அல்லது டேப்ளட் உள்ளிட்ட ஆதார் கிட் வழங்கப்படும். இதன் மூலம் ஆதார் தொடர்பான விவரங்களை பதிவு செய்யலாம்.
இதற்காக சோதனை முயற்சியாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி ஊழியர்கள் பயன்படுத்தும் கருவிகளை பயன்படுத்தஇருக்கிறோம். இந்த சேவை அடுத்தடுத்து நாடுமுழுவதும் விரிவுபடுத்தப்படும். இந்தியா போஸ்ட் வங்கி ஊழியர்கள் தவிர்த்து, இந்த சேவையில் தற்போது 13 ஆயிரம் வங்கி பிரதிநிதிகளும் பணியாற்றி வருகிறார்கள்.
இவர்கள் ஆதார் தொடர்பான விவரங்களைச் சேகரித்து, இந்தியாபோஸ்ட் ஊழியர்கள் மூலம் பதிவேற்றம் செய்கிறார்கள். இது தவிர்த்து நாட்டில் 755 மாவட்டங்களில்புதிதாக ஆதார் கேந்திராவையும் உருவாக்க யுஐடிஏஐ திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.