4day work week: வாரத்துக்கு 4 நாட்கள் வேலை: பிரிட்டனில் சோதனை முயற்சி தொடங்கியது: இந்தியாவில் எப்போது?

By Pothy RajFirst Published Jun 9, 2022, 12:50 PM IST
Highlights

4day work week :பிரிட்டனில் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே 48 மணிநேரம் வேலைபார்க்கும் திட்டம் சோதனைமுயற்சியாக கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தத் திட்டம் எப்போது சாத்தியம் எனத் தெரியவில்லை.

பிரிட்டனில் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே 48 மணிநேரம் வேலைபார்க்கும் திட்டம் சோதனைமுயற்சியாக கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தத் திட்டம் எப்போது சாத்தியம் எனத் தெரியவில்லை.

கொரோனா வைரஸ் பரவலுக்குப்பின் இப்போதுதான் உலகம் மெல்ல இயல்புவாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளளது. ஆனாலும், மறுபடியும் ஒரு கொரோனா அலை உலகில் வராது என்பது யாருக்கும் தெரியாது. 

இந்த இடைப்பட்டகாலத்தில் வாழ்க்கை இயல்புக்குத் திரும்பியுள்ளது. மக்கள் அலுவலகத்துக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இன்னும் ஏராளமானோர் வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள். பெருந்தொற்று கொண்டு வந்த மாற்றத்தால், நிறுவனங்கள் தங்களின் பணிக்கலாச்சாரத்தையே மறுஆய்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ளவும் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாகவே பிரிட்டனில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் செயல் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

அதாவது, வாரத்துக்கு 4 நாட்கள்வேலை, தினசரி 12 மணிநேரம் பணி, மொத்தம் 48மணிநேரம் என்ற சோதனைத் திட்டத்துடன் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. 70 நிறுவனங்கள், 3300 ஊழியர்கள் இந்த சோதனை முயற்சியில் 6 மாதங்கள் ஈடுபட உள்ளனர். இந்த சோதனை முயற்சியை பிரி்ட்டனில் உள்ள நாட் ஃபார் பிராபிட் 4டே வீக் குளோபல் என்ற அமைப்பும், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், பாஸ்டர் கல்லூரி இணைந்து நடத்துகின்றன.

இந்த 70 நிறுவனங்களில் 30வகையான தொழில்களை் சேர்ந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அதாவது 100 சதவீதம் ஊதியம், 80 சதவீதம் வேலை நேரம், 100 சதவீதம் உற்பத்தி என்ற அடிப்படையில் வேலை நடக்கிறது.

பிரிட்டனோடு இந்தத் திட்டம் இல்லாமல் ஸ்பெயின், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளும் வாரத்துக்கு 4 நாட்கள் பணி என்ற திட்டத்தை சோதனை முயற்சியாக செயல்படுத்த முடிவு செய்துளளன. இந்தத் திட்டம் ஐஸ்லாந்தில் செயல்படுத்தப்பட்டு மிகஅற்புதமான வெற்றியைப் பெற்றது, அதைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும்இந்தத் திட்டம் அமலானது.

வாரத்துக்கு 4 நாட்கள் பணி எனும் திட்டம் இந்தியாவில் எப்போது சாத்தியம் என்பது குறித்து டீம்லீஸ் சர்வீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜெய் தாமஸ் கூறுகையில் “ மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய தொழிலாளர் சட்டத்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலைபார்க்கும் திட்டம் இருக்கிறது.

வாரத்துக்கு 48மணிநேரம், தினசரி 12 மணிநேரம் வேலை எனும் திட்டம் இருக்கிறது. ஆனால், தொழிற்சாலைகள் மட்டும் 8மணிநேரம் வேலையை மாற்ற முடியாது. இந்தியாவில் இந்தத் திட்டம் வரும் காலத்தில் நடைமுறைக்கு வரலாம். புதிய தொழிலாளர் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும். வாரத்தில் 4 நாட்கள் வேலை இந்தியாவிலும் சாத்தியமாகும். 

வேலைக்கலாச்சாரம், ஊதிய உயர்வு, வேலைநேரம், வார வேலைநாட்கள் அனைத்தும் மாறும். குடும்பத்துடன் அதிகநேரம் செலவிட முடியும். இந்த திட்டத்துக்கான விதிகளை வகுப்பதில் அரசு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. மாநில அரசுகளும் இதுதொடர்பாக கருத்துக்களையும், விதிகளையும் வகுக்கவேண்டும்.” எனத் தெரிவி்த்தார்

click me!