narendra modi: பிரதமர் மோடி செய்த செயலுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாம்: ஒரேபோடுபோட்ட பிஎஸ்இ தலைவர்

By Pothy RajFirst Published Apr 30, 2022, 10:51 AM IST
Highlights

pm modi: narendra modi : nobel prize:  கொரோனா பரவல் நேரத்தில் நாடுமுழுவதும் ஏழைகளுக்கு இலவசமாக உலகிலேயே மிகப்பெரிய உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவரும் பிரதமர் மோடிக்கும், மத்தியஅரசுக்கும் ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவது குறித்து நோபல் கமிட்டி ஏன் தீவிரமாகப் பரிசீலிக்கக் கூடாது என்று மும்பை பங்குச்சந்தையின் தலைவர் ஆஷிஸ் சவுகான் புகழாரம் சூட்டியுள்ளார்.

கொரோனா பரவல் நேரத்தில் நாடுமுழுவதும் ஏழைகளுக்கு இலவசமாக உலகிலேயே மிகப்பெரிய உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவரும் பிரதமர் மோடிக்கும், மத்தியஅரசுக்கும் ஏன் நோபல் பரிசு வழங்குவது குறித்து நோபல் கமிட்டி ஏன் தீவிரமாகப் பரிசீலிக்கக் கூடாது என்று மும்பை பங்குச்சந்தையின் தலைவர் ஆஷிஸ் சவுகான் புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பைப் பங்குச்சந்தையின் தலைவர் ஆஷிஸ் சவுகான் நேற்று கொல்கத்தாவில் ஐஐஎம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

2020ம் ஆண்டு நோபல் பரிசு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்டது. உலகில் 11.50 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கும்திட்டத்தை செயல்படுத்தியதால்,உலக உணவுத் திட்டத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நான் கேட்கிறேன், இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி கொரோனா காலத்தில் இலவசமாக உணவு தானியங்களை வழங்கியுள்ளார். இந்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், உலக உணவுத் திட்டத்தின் 11.50 கோடி என்பது வெறும் 14% மட்டும்தான். 

88 நாடுகளில் உள்ள 9.7 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கியதற்காக ஐ.நாவின் உலக உணவுத் திட்டத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியும், அவர் தலைமையிலான அரசும் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கியது.

வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட நமது மக்களின் தனிநபர் வருமானம் 10 முதல் 30 மடங்கு குறைவுதான் இருப்பினும், கொரோனா காலத்தில் நாம்சிறப்பாகச் செயல்பட்டோம், அந்த கடினமான காலத்தில் நிர்வாகமும் சிறப்பாக இருந்தது. இதற்கு நாம் பெருமைப்பட வேண்டும். 

கொரோனா காலத்தில் 2 ஆண்டுகளுக்கு 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியது. பல்வேறு நாடுகளின் மக்கள் தொகையைச் சேர்த்தால்தான் இந்த அளவு எண்ணிக்கை வரும், மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். 11.50 கோடி மக்களுக்கு உணவு வழங்கிய உலக உணவுத் திட்டத்துக்கு நோபல் பரிசு வழங்கிய நோபல் கமிட்டி, 2 ஆண்டுகளாக 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கிவரும் பிரதமர் மோடிக்கும், அவரின் அரசுக்கும் ஏன் அமைதிக்கான நோபல்பரிசு வழங்கக்கூடாது, அதற்கு ஏன் தீவிரமாகப் பரிசீலிக்கக் கூடாது. பிரதமர் மோடி செயல்படுத்திவரும் இலவச உணவுத் திட்டத்தை இப்போதுகூட நோபல் கமிட்டி பார்வையிடலாம்.

இவ்வாறு ஆஷிஸ் சவுகான் தெரிவித்தார்

click me!