பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் கிடைக்கும். இதனைப் பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பி.எம் கிசான் திட்டம் எனப்படும் பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டமானது, ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் விவசாயிகளுக்கு அளிக்கிறது. பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 14வது தவணைக்காக பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரதமர் மோடியின் அரசு கடந்த பிப்ரவரி மாதம் 13வது தவணையை வெளியிட்டது.
பிரதம மந்திரி கிசான் யோஜனா 14வது தவணை இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். 14வது தவணை குறித்து விவசாயிகளுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 14வது தவணையை வெளியிடுவதற்கு முன், பிரதம மந்திரி கிசான் யோஜனாவுடன் ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மோடியின் பிரதம மந்திரி கிசான் யோஜனா விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கிறது. பிரதான் மந்திரி கிசான் மன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் விவசாயிகளின் கணக்குகளுக்கு அரசாங்கம் மாற்றுகிறது. இந்தத் திட்டத்தின் பிரீமியம் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் தொகையிலிருந்து கழிக்கப்படுகிறது. ஆனால் இதற்காக நீங்கள் ஒரு தனி படிவத்தை நிரப்ப வேண்டும்.
இந்த ஓய்வூதியத் திட்டத்தில் விவசாயிகள் மாதாந்திர பங்களிப்பாக ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். நீங்கள் 60 வயதை எட்டியதும், அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ.3000 ஓய்வூதியம் வரத் தொடங்கும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் பங்கேற்கலாம். இந்தியாவில் உள்ள வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 40 வயது வரை உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஓய்வூதியம் பெற, விவசாயிகள் தங்கள் வயதுக்கு ஏற்ப இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்தியாவிற்கு வரும் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. Google நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு