வீட்டுக் கடன்களுக்கு 4% வட்டி மானியம் வழங்கும் ஒரு சூப்பரான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயனடையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
PM Awas Yojana-Urban 2.0 Scheme: அனைவருக்கும் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்டும் கனவை நனவாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல. இந்நிலையில், மத்திய அரசு அனைவரும் வீடு கட்டுவதை எளிதாக்கும் வகையில் சூப்பரான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) 2.0 திட்டத்தின் கீழ், அரசாங்கம் மக்களின் வீட்டுக் கடன்களுக்கு வட்டி மானியத்தை அளிக்கிறது. இந்த திட்டத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வோம்.
வீட்டுக் கடன்களுக்கு மானியம்
இந்த வட்டி மானிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீட்டுக் கடன்களுக்கு அரசாங்கம் நிவாரணம் அளிக்கிறது. இந்த நன்மை EWS/LIG மற்றும் MIG குடும்பங்களுக்கான வீட்டுக் கடன்களுக்கு மானிய நன்மைகளை வழங்கும். அதாவது ரூ.35 லட்சம் வரை மதிப்புள்ள ஒரு வீட்டிற்கு ரூ.25 லட்சம் வரை வீட்டுக்கடன்கள் வாங்கும் பயனாளிகள் தள்ளுபடி பெறுகிறார்கள்.
எவ்வளவு மானியம் கிடைக்கும்?
இத்தகைய பயனாளிகள் 12 வருட காலத்திற்கு ரூ.8 லட்சம் முதல் கடனில் 4 சதவீத வட்டி மானியத்திற்கு தகுதி பெறுவார்கள். 5 ஆண்டு தவணைகளில் புஷ் பெத்தான் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு 1.80 லட்சம் மானியம் கிடைக்கும். பயனாளிகள் தங்கள் கணக்குத் விவரங்களை வலைத்தளம், OTP அல்லது ஸ்மார்ட் கார்டு மூலம் சரிபார்க்கலாம்.
ரேஷன் கார்டு : ஆன்லைன் vs ஆஃப்லைன் - எதில் அப்ளே பண்ணுனா ஈஸியா கிடைக்கும்?
தகுதியானவர்கள் யார்? யார்?
EWS: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை உள்ள குடும்பங்கள், LIG: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை உள்ள குடும்பங்கள், MIG: ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை உள்ள குடும்பங்கள் மத்திய அரசின் இந்த திட்டத்தை பெற தகுதியானவர்கள்
PMAY-U 2.0 திட்டத்தில் நான்கு கூறுகள் உளளன. அவை:-
(i) பயனாளி அடிப்படையிலான கட்டுமானம் (பி.எல்.சி)
(ii) கூட்டாண்மையில் மலிவு வீட்டுவசதி (AHP)
(iii) மலிவு வாடகை வீட்டுவசதி (ARH)
(iv) வட்டி மானியத் திட்டம் (ஐ.எஸ்.எஸ்)
இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன?
பயனாளிகள் நான்கு கூறுகளில் ஒன்றைத் தேர்வு செய்து பயனடையலாம். PM Awas Yojana-Urban 2.0 Scheme எனப்படும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 1.18 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 85.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கி கணக்கில் விழும் பெரிய தொகை.. டிஏ உயர்வு அறிவிப்பால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்