Piyush:tomato price: இந்தியாவுலதான் விலைவாசி கம்மியாத்தான் இருக்கு: பியூஷ் கோயல் மழுப்பல்

By Pothy RajFirst Published Jun 4, 2022, 2:51 PM IST
Highlights

Piyush :tomato price:உலகளவில் நிலவும் பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் பொருட்களின் விலை குறைவாகத்தான் இருக்கிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

உலகளவில் நிலவும் பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் பொருட்களின் விலை குறைவாகத்தான் இருக்கிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. இந்த விலை உயர்வு அனைத்து பொருட்களின் மீதும் எதிரொலித்தது. உக்ரைனிலிருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாதநிலையால் சமையல் எண்ணெய் விலையும் அதிகரித்தது. இதற்கிடையே பாமாயில் ஏற்றுமதிக்கு மலேசியா அரசு தடைவிதித்து.இதுபோன்ற காரணங்களால் இந்தியாவில் பணவீக்கம், விலைவாசி கடுமையாக உயர்ந்தது

பணவீக்கம்

நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தி வைக்க ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது. ஆனால், 2022 ஜனவரி முதல் பணவீக்கம் 6 சதவீதத்தை கடந்து வருகிறது, மார்ச் மாதம் சில்லரை பணவீக்கம் 6.95 சதவீதமாகவும், ஏப்ரலில் 7.79 சதவீதமாகவும் அதிகரித்தது.தொடர்ந்து 4-வது மாதமாக பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவைவிடக் கடந்தது. 

இதையடுத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரஅவசரமாக ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ ரேட்டை 40 புள்ளிகள் உயர்த்தியது. கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ரெப்போ ரேட்டை உயர்த்தாமல் இருந்த ரிசர்வ் வங்கி 40 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, 4.40 சதவீதமாக வட்டிவீதம் அதிகரித்தது. அடுத்தவாரம் நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் எனத் தெரிகிறது.

தக்காளி விலை

இதற்கிடைய கடந்த சில வாரங்களாக நாடுமுழுவதும் தக்காளி விலை சக்கைபோடு போட்டு வருகிறது. வடமாநிலங்களில் தக்காளிவிலை கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாகிறது. ஆனால், தக்காளிவிலை அடுத்த இருவாரங்களுக்கு குறையவாய்பில்லை, புதிதாகசீசன் தொடங்கி அறுவடையாகும்வரை குறையாது என வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையே தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்தால், தக்காளி விளைச்சல் இன்னும் மோசமாகும்.
இந்நிலையில்மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

நாங்க காரணமில்லை

அப்போது அவரிடம் விலைவாசி உயர்வு, பணவீக்கம், தக்காளி விலை உயர்வு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ தக்காளி விலை உயர்வு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, அரசுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உலகளவில் நிலவும் பணவீக்கத்தை நீங்கள் இந்தியாவுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் பொருட்கள் விலை மிகக் குறைவுதான்.

தினசரி உணவுப் பொருட்களின் விலைவாசியைக் கண்காணிக்க அமைச்சர்கல் அளவில், செயலாளர்கள் அளவில், கேபினெட்செயலாளர்கள் அளவில் 3 அடுக்கு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்காணிக்கிறார். வேளாண் துறை அமைச்சர், நிதி அமைச்சரும் கணகாணிக்கிறார்கள்.

உலகளவில் குறைவு

உலக நாடுகளில் பணவீக்கம் இந்தியாவைவிட அதிகமாக இருக்கிறது. அங்கு நிலைமையே இந்தியாவோடு ஒப்பிட்டால் இங்கு பொருட்கள் விலைவாசி குறைவுதான். சில பொருட்கள் விலைவாசி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. குறிப்பாக தக்காளி.ஒவ்வொரு ஆண்டும்சில மாதங்கள் சில பொருட்கள் விலை வாி உயரும், குறையும். ஆனால் வர்த்தகர்கள், விவசாயிகளுக்கு சராசரி வருமானம் கிடைத்துவிடும். 

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இப்போதுள்ள நிலையில் அரசின் தலையீடு ஏதும் தேவையில்லை என்று நினைக்கிறேன்
இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்


 

click me!