lic share: எல்ஐசி பங்குக்கு மட்டும்தான் இந்த நிலைமைனு நினைச்சோம்! மே மாசத்துல பாதி ஐபிஓ காலியா !

By Pothy RajFirst Published Jun 4, 2022, 2:15 PM IST
Highlights

lic share :மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் மே மாதத்தில் லிஸ்டிங் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் பாதிக்கு மேற்பட்டவை இழப்பைச் சந்தித்துள்ளன. இதில் எல்ஐசி நிறுவனமும் தப்பிக்கவில்லை.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் மே மாதத்தில் லிஸ்டிங் செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் பாதிக்கு மேற்பட்டவை இழப்பைச் சந்தித்துள்ளன. இதில் எல்ஐசி நிறுவனமும் தப்பிக்கவில்லை.

மே மாதத்தில் ஐபிஓ சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியவர்களுக்கு லாபமும், நஷ்டமும் கலந்ததாகவே இருந்தது. கடந்த மாதம் 8 நிறுவனங்களின் பங்குகள் பட்டியலிடப்பட்டன. இதில் பாதிக்கு மேற்பட்டவை இழப்பில் முடிந்துள்ளன. மீதமுள்ள பங்குகள் ஓரளவுக்கு லாபத்தை அடைந்துள்ளன.

ஏமாற்றம்

இதில் குறிப்பாக மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ. எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை விற்று ரூ.20ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டது. அதுபோலவே ரூ.20,557 கோடி பங்கு விற்பனை மூலம் கிடைத்தது. எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கு விலை ரூ.949 ஆகநிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் கடந்த மாதம் 17ம் தேதி பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட்டபோது பங்கு விலையைவிட 8சதவீதம் குறைவாக எல்ஐசி பங்கு விற்பனையானது. எஸ்எஸ்இ தேசியப்பங்குசந்தையில் எல்ஐசி பங்கு ஒன்று ரூ.872க்கு அதாவது 8 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால் எல்ஐசி பங்கின் உண்மையான விலை ரூ.949 என நிர்ணயிக்கப்பட்டது.

ரூ.80ஆயிரம் கோடி இழப்பு

எல்ஐசி  பங்குகள் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்ட நிலையில் ரூ.5.57 லட்சம் கோடியாகக் குறைந்தது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு வாங்கினால் லாபம்கிடைக்கும் என்று எண்ணி வாங்கியவர்கள் நிலைமை தலையில் கைவைத்தனர். ரூ.6 லட்சத்து 242 கோடியாக இருந்த எல்ஐசி பங்கு மதிப்பு, ரூ.42 ஆயிரத்து 500 கோடி குறைந்து, ரூ.5 லட்சத்து 57ஆயிரதத் 675 கோடியாகக் குறைந்தது.

வெள்ளிக்கிழமை(நேற்று) வர்த்தகம் முடிவில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் சரிந்து ரூ.5 லட்சத்து 19ஆயிரத்து 630 கோடியாகக் குறைந்தது. அதாவது, எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.80ஆயிரத்து 600 கோடி குறைந்தது. ஏறக்குறைய முதலீட்டாளர்களுக்கு ரூ.80ஆயிரத்துக்கும் அதிகமான கோடி இழப்பு ஏற்பட்டது.

ரூ.949க்கு பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களுக்கு லிஸ்டிங்கின் போது 8 சதவீதம் குறைந்து  ரூ.872க்கு விற்பனை செய்யப்பட்டது. மாதக்கடைசியல் எல்ஐசி பங்கு மதிப்பு 14 சதவீதம் குறைந்தது. ஜூன் மாதம் தொடங்கிபின், அதனினும் மோசமாக வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் எல்ஐசி பங்கு ரூ.800க்கு விற்பனையானது.

கேம்பஸ் லாபம்

கேம்பஸ் ஆக்டிவ்வியர் நிறுவனமும் கடந்த மே மாதம் ஐபிஓ வெளியிட்டு ரூ.1400 கோடி திரட்டியது. மே மாதத்தில் கேம்பஸ் நிறுவனம் 26சதவீதம் லாபத்துடன் முடிந்தது. அதாவது பங்குவெளியீட்டுவிலையை கூட 26சதவீதம் லாபம் முதலீட்டாளர்ளுக்கு கிடைத்தது.

ரெயின்போ சின்ட்ரன் மெடிக்கேர் நிறுவனமும் ஐபிஓ வெளியிட்டது. ஆனால், மாதக் கடைசியில் 7சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஐபிஓ விலையை விட 9% விலை வீழ்ச்சி அடைந்தது.

தப்பித்த வீனஸ்

ப்ரூடன்ட் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீஸ் நிறுவனம் லிஸ்டிங்கின்போது 5 சதவீதம் ப்ரீமியம் லிஸ்டிங்கில் கிடைத்தது. ஆனால், மாதக் கடைசியில் ஐபிஓ விலையைவிட 7 சதவீதம் பங்குவிலை குறைந்தது.டெல்லிவெரி நிறுவனமும் ஐபிஓ கடந்தமாதம் வெளியிட்டதில் பங்குகள் மதிப்பு ஒரு சதவீதம் அதிகரித்தது. மாதக்கடைசியில் 9 சதவீதம் அதிகரித்தது. 

வீனஸ் பைப்ப்ஸ் அன்ட் ட்யூப்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டு ரூ.165 கோடி ஈட்டியது. லிஸ்டிங் செய்யப்பட்ட முதல்நாளில் 3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. ஆனால், மாதக்கடைசியில் ஒரு சதவீதம் பங்கு மதிப்பு வீழ்ந்தது.

பாதிக்கு பாதி

பாரதீப் பாஸ்பேட்ஸ் நிறுவனம் முதல்முறையாக ஐபிஓ வெளியிட்டு ரூ.1502 கோடி முதலீடு ஈர்த்தது. லிஸ்டிங் செய்யப்பட்ட முதல்நாளில் 4 சதவீதம் பங்கு மதிப்பு உயர்ந்தது, மாதக் கடைசியில் எந்தவிதமான நஷ்டமும் இல்லாமல் தப்பித்தது.  ஈத்தோஸ் நிறுவனம் கடந்த மாத் ஐபிஓ வெளியிட்டு லிஸ்டிங் செய்யப்பட்ட நாளில் பங்கு மதிப்பு 5 சதவீதம் சரிந்தது. மாதக்கடைசியில் நிலைமை மோசமாகி 8சதவீதம் வரை பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்தது.

click me!