எகிறி எகிறி அடிக்கும் பெட்ரோல், டீசல் விலை... புலம்பும் வாகன ஓட்டிகள்!

By vinoth kumarFirst Published Dec 18, 2018, 10:35 AM IST
Highlights

பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் மீண்டும் உயர்த்தப்படும் பெட்ரோல் விலையால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர தொடங்கிவிட்டது.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் மீண்டும் உயர்த்தப்படும் பெட்ரோல் விலையால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர தொடங்கிவிட்டது.

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

அதன்படி கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஏறுமுகத்தில் எரிப்பொருட்களின் விலை இருந்து வருகின்றன. இதன் காரணமாக, வாகன கட்டணங்கள் அதிகரிப்பதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அக்டோபர் மாதம் 17ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து கொண்டே செல்கிகறது.

click me!