கிழிச்சு தொங்கவிட்ட 5 மாநில தேர்தல்... அடிச்சுத்தூக்கும் பெட்ரோல்-டீசல் விலை!

Published : Dec 17, 2018, 11:21 AM IST
கிழிச்சு தொங்கவிட்ட 5 மாநில தேர்தல்... அடிச்சுத்தூக்கும் பெட்ரோல்-டீசல் விலை!

சுருக்கம்

ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 57 நாட்களாக தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை குறைந்து வந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சில தினங்களாக குறைந்தும், அதிகரித்தும் வந்தநிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 20 காசு, டீசல் லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்துள்ளது. 

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது.

தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகமாக இருந்து வந்தது. இந்த நிலையில், 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டு வந்தது. 

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் உயர்ந்து ரூ.73.19 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் உயர்ந்து ரூ.68.07 ஆகவும் விற்பனை ஆகிறது. பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் விலை குறைந்த பெட்ரோல் -டீசல் விலை, தேர்தல் முடிவுக்கு பிறகு அதிகரிப்பதில் மத்திய அரசின் தலையீடு இல்லாமல் இருக்குமா? என வாகன ஓட்டிகள் புலம்பியபடி செல்கின்றனர்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?