petrol diesel price : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.12, எல்பிஜி ரூ.280 உயரும்: நோமுரா ஆய்வில் தகவல்

By Pothy RajFirst Published Apr 1, 2022, 11:18 AM IST
Highlights

petrol diesel price :பெட்ரோல், டீசல்விலை லிட்டருக்கு இன்னும் 12 ரூபாய் வரை உயரக்கூடும், எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.280 வரை உயரலாம் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல்விலை லிட்டருக்கு இன்னும் 12 ரூபாய் வரை உயரக்கூடும், எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.280 வரை உயரலாம் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான நோமுரா தெரிவித்துள்ளது. இதனால் சாமானியர்கள், நடுத்தர குடும்பத்து மக்கள் பெட்ரோல், டீசல், எல்பிஜி சிலிண்டருக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கும். 

விலை உயர்வு

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. ஆனால் கடந்த மாதம் 22ம் தேதியிலிருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்த்தப்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6.40, டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.50 விலை அதிகரித்துள்ளது

ரூ12 உயரலாம்

இந்நிலைியல் பொருளாதார ஆய்வு நிறுவனமான நோமுராவின் இந்தியாவுக்கான தலைமைப் பொருாதார வல்லுநர் சோனல் வர்மா வெளியிட்ட அறிக்கையில் “ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக 132 டாலர் வரை இருக்கும் என்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ12வரை உயரக்கூடும். வீடுகளில் சமையலுக்கு பயன்படும் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.280 வரை உயரக்கூடும்

ஆனால், அது ரூ.280 வரை உயரக்கூடும். ஆனால் அரசு ஏதோ காரணங்களால் விலை உயர்வை அமல்படுத்தாமல் வைத்துள்ளது. இந்தவிலைவாசி உயர்வு, மற்ற விஷயங்களான ஏற்றுமதி இறக்குமதி, காப்பீடு, சரக்குப்போக்குவரத்திலும் எதிரொலிக்கும்

விலைவாசி அதிகரிக்கும்

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்போது, போக்குவரத்துக்கு செலவிடும் தொகை அதிகரி்க்கும். ரயில்வே, பேருந்து, டாக்ஸி, ஆட்டோ, பள்ளிப்பேருந்து, விமானக் கட்டணம் ஆகியவையும்  அதிகரிக்கும். பெட்ரோல்,டீசலில் 5 முதல் 10 சதவீத விலை உயர்வு, பணவீக்கத்தில் 0.1 முதல் 0.2 புள்ளிகள்வரை உயர்த்தும். ஆனால், மத்திய அரசு உற்பத்தி வரியை கடந்த ஆண்டு நவம்பரில் குறைத்ததுதான் ஓரளவுக்கு ஆறுதலாகும். இல்லாவிட்டால் தற்போது பெட்ரோல் லிட்டர் ரூ.116 ஆகவும், டீசல் ரூ.107ஆகவும் இருந்திருக்கும்.

இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு

இயற்கை எரிவாயு விலையை இரு மடங்கு மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் மின்சாரம், உரம் உற்பத்தி, சிஎன்ஜி, வீடுகளுக்கு குழாய்களில் கொண்டு செல்லப்படும் எரிவாயு ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கும். 

விலைவாசி உயர்வு, உற்பத்தி செலவு உயர்வு ஆகியவற்றின் நெருக்கடியை உற்பத்தி நிறுவனங்களால் தாங்கமுடியவில்லை.அதனால்தான் அதை நுகர்வோர் மீது மாற்றியுள்ளன. இதனால், வரும் நாட்களில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள், வாகனங்கள், தனிநபர் உடல்நலப்பாதுகாப்பான பொருட்கள், எப்எம்சிஜி பொருட்கள்விலையும் அதிகரிக்கும்
 

click me!