உடனே பெட்ரோல்  போடுங்க.... இன்று இரவு நாடு முழுவதும் 15 நிமிடத்திற்கு பெட்ரோல் விற்பனை நிறுத்தம்.....!

Asianet News Tamil  
Published : Oct 20, 2016, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
உடனே பெட்ரோல்  போடுங்க.... இன்று இரவு நாடு முழுவதும் 15 நிமிடத்திற்கு பெட்ரோல் விற்பனை நிறுத்தம்.....!

சுருக்கம்

உடனே பெட்ரோல்  போடுங்க.... இன்று இரவு நாடு முழுவதும் 15 நிமிடத்திற்கு பெட்ரோல் விற்பனை நிறுத்தம்.....!

கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, பெட்ரோல் பங்குகளில் இன்று விற்பனை நிறுத்தம் செய்ய பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு முதல் பெட்ரோல் பங்குகளுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்ததாக  தெரிகிறது.  ஆனால் இதுவரை இதற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என பெட்ரோலிய விற்பனையாளர் சங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்  தொடர்ச்சியாக இதற்கு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று இரவு 7 மணி முதல் 15 நிமிடங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் விற்பனை நிறுத்தவும், கடைகளில் விளக்குகள் அணைத்து எதிர்ப்பை தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்  மூலம், விரைவில் இதற்கு நல்ல முடிவை எட்ட  வேண்டும் என்றும்  இல்லையென்றால், அடுத்த கட்ட போராட்டத்தில்  இறங்க போவதாகவும் பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

 


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?
Atal Pension: அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இனி மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்? மத்திய அரசு தீவிர பரிசீலனை