ஆர்வத்தை ஏற்படுத்திய - பிப்ரவரி 1 ...!!!! மக்களின்  தாகத்தை  தீர்க்குமா ...?

First Published Dec 19, 2016, 2:03 PM IST
Highlights


ஆர்வத்தை ஏற்படுத்திய - பிப்ரவரி 1 ஆம் தேதி....! மக்களின்  தாகத்தை  தீர்க்குமா ...???

ரூபாய்  நோட்டு  செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து , பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை  அனுபவித்து வருகிறார்கள்.  மேலும்,  தற்போது  டெபாசிட் செய்த பணத்தை கூட வங்கி கணக்கில்  இருந்து எடுக்க முடியாமலும், அதே  சமயத்தில் ஏ டி எம் மெஷினிலிருந்து  பணத்தை  எடுக்க முடியாத சூழ்நிலை எற்பட்டுள்ளதாலும்  பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில்,  வரும்  ஜனவரி  முதல்  அனைத்து பிரச்சனைகளும்  சரி ஆகி விடும் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்தாலும், மக்கள்  இன்னமும்  பல  சிரமங்களை  அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிந்தபோது பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி தனது புதிய அதிரடி திட்டம் பற்றி  எம் பிக்களிடம்  பேசி உள்ளார்.

அதாவது, ஏழைகள், நடுத்தர மக்கள், தொழில் செய்பவர்களுக்கு   முன்னுரிமை   அளித்து  பல்வேறு  நலத்திட்டங்களை  அறிவிக்க    திட்டமிட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார் .

இந்த  சலுகைகள்  குறித்த,  முக்கிய  அறிவிப்பை ,  வரும்  பிப்ரவரி  1 ஆம்  தேதி தாக்கல்  செய்ய  உள்ள  மத்திய  பட்ஜெட்டில் வெளியாகும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம்,  ஏழை எளிய  நடுத்தர  மக்கள்  நல்ல  பலன்  பெரும் வகையில்  வரும் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல்  செய்ய உள்ள   பட்ஜெட்டில் அந்த சலுகைகளை அறிவிக்க முடிவு   செய்யப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.  

click me!